தென்குமரியின் சரித்திரம்
தென்குமரியின் சரித்திரம், அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்.
நூலாசிரியர் அ.கா.பெருமாள் தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான பழைய அரிய புகைப்படங்களும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. தகவல்களில் பல, யூகங்கள், கதைகள் சார்ந்தவை. நாஞ்சில்நாடு பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. கதை சார்ந்த குறிப்பும் உள்ளது. பல இடங்களில் அவை, விளக்கமற்றவையாக உள்ளன. நாஞ்சில் நாடு என்பது ஓர் ஆளுகை பரப்பா அல்லது வாழ்விடமா என, குறிப்பிடப்படவில்லை. மிக முக்கியமான அதன் எல்லை பற்றிய ஆதாரங்கள் தரப்படவில்லை. -அமுதன். நன்றி: தினமலர்,14/9/2014.
—-
இருபத்தொன்றாம் நூற்றாண்டு சோசலிசம், ஐந்து சிந்தனைகள், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை, விலை 25ரூ.
சோசலிசம் குறித்த ஐந்து சிந்தனைகளை சிலே நாட்டைச் சேர்ந்த மார்த்தா ஆர்னெக்கார் எழுதிய தொகுப்பை தமிழில் அமரந்த்தா மொழி பெயர்த்துள்ளார். சோசலிசம் நோக்கிய பயணத்தில் நாம் சந்திக்க வேண்டிய சவால்களையும் அடைய வேண்டிய இலக்கையும் விரிவாக தெரிவித்து உள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.