தெய்வம் நீயென்றுணர்
தெய்வம் நீயென்றுணர், கணபதி ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 134, விலை 75ரூ.
மகாகவி பாரதியின் ஆத்திசூடியிலிருந்து பெறப்பட்ட தலைப்பு. ஆசிரியர் கணபதி ராமகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் போலும். கடவுள் துகள் என்ற சமீபத்திய ஒரு கோட்பாட்டை, நமது ஆன்மிகத்துடன் இணைத்து வைத்துப் பார்க்கிறார் ஆசிரியர். பெரிய வெடிப்பிற்கு பிறகு, பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே எலக்ட்ரான், புரோட்டான் போன்றவை உருவாயின. அதன் பிறகே, மிகச் சிறிய அளவே உயிர் அமீபாவா வந்தது என்று ஆரம்பிக்கும், இவரது பிரபஞ்ச தோற்ற வளர்ச்சிக்கு ஆராய்ச்சி வாசகனை நிச்சயம் ஈர்க்கும். துணை நூல் பட்டியலும், நூலின் இறுதியில், உண்மையான ஞானம், ஆன்மா பற்றிக் கூறியுள்ளதும், இந்த நூலின் தனித்தன்மையை நமக்கு உணர்த்துகிறது. -ஜனகன்.
—-
ப்ரேம் சந்த் கதைகள், லதா ராமகிருஷ்ணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இண்டஸ்ட்டியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 302, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-7.html
பள்ளி ஆசிரியை பணியை விட்டு விட்டு விடுதலைப் போராட்ட வீரராக, தம் இலக்கியங்கள் மூலம் எழை எளிய மக்களின் நல்வாழ்வையும், நாட்டுப்பற்றையும் வலுவூட்டிய ப்ரேம் சந்த் எழுதிய இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு படிப்பினையைப் பதிவாக்கியுள்ளது. கடனை மிஞ்சிய வட்டியின் கொடுமையை கையளவு கோதுமையிலும் குடிப்பழக்கம் நாட்டுக்கு நன்மை செய்யாது என்பதை சதுரங்க ஆட்டக்காரர்கள் கதையிலும் இப்படி ஒவ்வொன்றும் ஒரு கருவை மையமாகக் கொண்டது. கலையின் நயங்கள், நளினங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் அவரால் புறந்தள்ளப்பட்ட போதிலும், அவர் சுட்டும் வறுமையும், துயரமும், மிகுந்த வீச்சோடு நம்மைக் கவரக்கூடியவை. இலக்கிய முன்னோடி என்பதால், அவரது நடைக்கும் எழுத்துக்கும் என்றும் பெருமை உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகள் ஆங்கிலம் மூலம் மொழி பெயர்க்கப்பட்டவை. -பின்னலூரான். நன்றி: தினமலர், 09/06/13.