தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள்
தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள், தொகுப்பாளர்-மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 140ரூ.
கவிஞர், இதழாசிரியர், சினிமா வசனகர்த்தா, திரைப்பட பாடலாசிரியர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கவியரங்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர் சுரதா. அவர் பாடல்களில் உவமைகள் அதிகம் இருப்பதால் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். கவிஞர் சுரதாவின் தெரிந்தெடுத்த கதைகளை சாகித்ய அகாடமி தொகுத்து வெளியிட்டுள்ளது. இவர் மிகக் குறைவான சினிமா பாடல்களையே எழுதி இருக்கிறார் என்ற போதிலும் அவை கருத்தாழமும், பலமை வீச்சும் நிறைந்தவை. அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே இன்பக் காவியக் கலையே ஓவியமே, ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா, விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் என்பன போன்ற பாடல்கள் காலத்தை வென்றவை. முழு நேரமும் கவிதையே தமது பணியாக ஏற்று வாழ்ந்த சுரதாவுக்கு இந்த நூல் ஒரு சிறந்த நினைவாஞ்சலி. நன்றி: தினத்தந்தி, 2/7/2014.
—-
ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி, டாக்டர் கீதா அர்ஜுன், தமிழாக்கம் ஹேமா நரசிம்மன், திருமகள் நிலையம், சென்னை, விலை 350ரூ.
தாய்மை என்பதே ஒவ்வொரு பெண்ணும் ஆவலுடன் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ஆனால் பெண்கள் கருவுற்றதுமே பயமும், கவலையும் கொள்கின்றனர். இதனை போக்கி கர்ப்ப காலத்தில் நடக்கும் அனைத்து மாற்றங்களையும், 21ம் நூற்றாண்டில் உள்ள வசதிகளையும் குறித்த தகவல்கள் அடங்கிய நூலாகும். திருமணமான அனைத்து பெண்களும் படித்து பயனடைய வேண்டிய நூலாகும். நன்றி: தினத்தந்தி, 2/7/2014.