நமது சினிமா (1912-2012)

நமது சினிமா (1912-2012), கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-8.html

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமா படம் ராஜா ஹரிச்சநதிரா இந்திய சினிமாவின் பிதாமகன் என்று போற்றப்படும் பால்கே, 1913ம் ஆண்டில் இதைத் தயாரித்தார். எனவே இந்தியாவில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நமது சினிமா (1912-2012) என்ற இந்தப் புத்தகத்தை சிவன் சிறந்த முறையில் எழுதியுள்ளார். சினிமா களஞ்சியம் என்று கூறத்தக்க விதத்தில் சிறந்த படங்கள், பரிசு பெற்ற படங்கள், வருட வாரியாக நடந்த முக்கிய நிகழ்வுகள், திரை உலகப் பிரபலங்கள் பற்றிய விவரங்கள்… இப்படி சினிமா பற்றிய சுவையான விஷயங்கள் நிறைந்துள்ளன. 576 பக்கங்கள் கொண்ட கனமான புத்தகம். சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷம்.  

—-

 

அகநானூறுப் பதிப்பு பின்புலம், மா. பரமசிவன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 140ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-319-3.html

அகநானூற்றை பதித்த உ.வே. சாமிநாத அய்யர், ராஜகோபாலார்யன் உள்ளிட்டோர் அதற்காக மேற்கொண்ட பணிகள் மற்றும் அவர்கள் பதிக்கத்தவறிய ஏடுகள் குறித்து அலசியுள்ளார் ஆசிரியர். நூலின் இநுதியல் அகநானூற்று உரை வேறுபாடுகளை பட்டியலிட்டிருக்கும் அவர், பதிப்பாசிரியர்கள் தங்கள் உரையில் இழைத்த தவறுகளையும் துணிவுடன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.  

—-

 

வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு, பாரதி பதிப்பகம், 126-108, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 349ரூ. To buy this Tamil book onine – www.nhm.in/shop/100-00-0002-175-1.html

வாழ்க்கை வரலாறு என்பது ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகள், கவலைகள், கனவுகள், எதிர்ப்பார்ப்புகள் ஆகியவற்றின் பதிவாகும். கவலைகள் என்பன அனுபவித்து மறைந்து போனவை. தொடர்வனவும் உள்ளன. கனவுகளில் பல நிறைவேறியவை, சில பொய்த்துப் பழங்கதையாய்ப் போனவை. இன்னும் சில எதிர்பார்ப்புகளாக வாழ்பவை. எனவே வாழ்க்கை வரலாறும் ஒரு பொருள் உள்ள ஆவணமாக இருந்திருக்கிறது. ஆழ்ந்து சிந்தித்தால் உண்மைகளின் ஊற்றே வாழ்க்கைதான், வாழ்ந்து கண்டு அனுபவங்களின் தொகுப்பாக படைக்கப்பட்டிருக்கிற இப்புத்தகம். அறிவியல், தொழில் நுட்பத் துறைக்கல்வி, நீர்வளத்துறையில் அத்துறை சார்ந்த உலக அறிஞர்கள் ஒப்பும் தரம் வாய்ந்த ஆய்வு, ஆங்கிலம், தமிழ் இரண்டையும் எழுத்திலும், பேச்சிலும் கையாளுவதில் பிரமிக்கத்தக்க ஆற்றல், ஆங்கிலத்தின் வழி அறிவுத் துறைகள் பலவற்றிலும் தற்கால முன்னேற்றம் வரையான பரிச்சயம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் முதல் இந்திய துணைக் கண்டத்திற்கு உள்ளும் வெளியேயும் பல உயர் பதவிகள் வகித்த அனுபவம், மிகச் சிறந்த நிர்வாகி, நேர்மையாளர், மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர், இவற்றுடன் கலைமகளின் அருள்பெற்றது போன்று கவித்துவம் இவை அனைத்தும் வரலாற்று நாயகர் டாக்டர் வா.செ. குழந்தைசாமியிடம் சங்கமமாகி இருப்பது ஓர் அபூர்வ வரமேயாகும். இத்தகைய பின்னணி கொண்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆடு, மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி என்ற தலைப்பில் எழுத்தாளர் ராணிமைந்தன் சுவைபட தொகுததிருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 18/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *