நானும் மனிதனும்

நானும் மனிதனும், இளஞ்சேரன், சம்பிரித்தி பதிப்பகம், 10, ஜானகிராம் காலனி விரிவு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 184, விலை 120ரூ.

மனுநீதிச் சோழன், பசுக்கன்றைக் கொன்ற தன் மகனை அதே தேர்க்காலிலிட்டுக் கொன்றான். இது நீதி. மனிதர்கள் ஒவ்வொரு நாளும், ஆடு, மாடு,  கோழியென நூற்றுக்கணக்கானவற்றைக் கொன்று தின்கிறார்களே. மனுநீதிச் சோழனை முன் மாதிரியாகக் கொண்டு இந்த மனிதர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க முடியுமா? இதுபோன்ற படிப்பினை வழங்கும் 48 சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தனையும் மனிதம் பற்றி உணர்த்துபவை. குழந்தைகளுக்கும் சரி. பெரியவர்களுக்கும் சரி. தெரிந்து கொள்ள இதில் நிறைய உண்டு. நன்றி: குமுதம், 11/9/2013.  

 

அதிசய மலர், செல்வம் அண்ட்கோ, 6, முதல் தெரு, குறிஞ்சிநகர், மேற்கு தாம்பரம், சென்னை 45, விலை 100ரூ.

மகளிர் முன்னேற்றம் பேணும் சிறந்த சமூக நாவல். வேறொரு பெண்ணுடன் பழகும் காதல் கணவனை ஒதுக்கி வைக்கிறாள் கதை நாயகி. பல்வேறு சோதனைகளை சந்திக்கும் அப்பெண், சட்டம் படித்து வக்கீலாக நீதிபதியாகவும் உயர்கிறார். இக்கட்டான சூழலில் கணவனை பிரியும் பெண்கள் மனச்சோர்வு அடையாமல் பலம் பெற வேண்டும். தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுருத்துகிறார் நூலாசிரியர் நீதிபதி புகழேந்தி. தொய்வு இல்லாமல் செல்லும் இக்கதையை பெண்கள் அவசியம் படிக்க வேண்டும். நன்றி: தினத்தந்தி, 14/8/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *