நான் சுவாசிக்கும் சிவாஜி
நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய். ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், பக். 192, விலை 120ரூ.
ரசிகர்கள் பார்வையில், சிவாஜியை பார்ப்பது ஒரு பரிமாணம். அவரை சந்தித்தவர்கள் பார்வையில் அவரை பார்ப்பது, வேறொரு பரிமாணம். அவருடன் நெருங்கி பழகிய குடும்ப நண்பர், சிவாஜியுடன், 33 படங்களில் நடித்தவர் என்ற முறையில் நூலாசிரியரின் எழுத்தில் நாம் பார்க்கும், சிவாஜியோ, முப்பரிமாணமாக, மனதுள் விரிகிறார். பொதுவாக சிவாஜியின் நடிப்பை வியந்திருக்கும் ரசிகர்களுக்கு, அவர் நடிப்பில் காட்டிய நுணுக்கங்களையும், மேதைமைகளையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூலாசிரியர் விவரிக்கையில், அட, ஆமாம்ல என்றொரு பிரமிப்பு எழுவது உறுதி. நடிப்பு நுணுக்கங்கள் தவிர சிவாஜியின் பல நற்பண்புகளை எடுத்துரைக்கும் சம்பவங்கள் நூலில் இடம் பெற்றள்ளன. பக்கத்துக்கு பக்கம், விதவிதமான சிவாஜி புகைப்படங்களும் உள்ளன. சிவாஜியின் நடிப்பை காஞ்சி பெரியவர் வியந்த சம்பவம், பிரான்ஸ் நடிகர்கள், நவராத்திரி படத்தை பார்த்து, பிரமித்த சம்பவம், நடிப்பு கலையை பற்றி சிவாஜியே தெரிவித்த கருத்தகள் என, பலப்பல புதிய விஷயங்களை உள்ளடக்கி, சிறப்பாக வெளிவந்துள்ளது இந்த நூல். -பாலகணேஷ். நன்றி: தினமலர், 26/4/2015.
—-
கம்பரும் வைணவமும், பாவலர்மணி சித்தன், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ.
கம்பர் வைணவர் என்ற அடிப்படையிலேயே தமது ராமாயணத்தை இயற்றினார் என்பதற்கு சான்றுகளுடன் நூலாசிரியர் விளக்குகிறார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.