நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்
நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338, சபரிசாலை, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 60ரூ.
இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் சிறந்த புத்தகம். உலகின் முதல் பல்கலைக்கழகம், கி.மு. 700-ல் இந்தியாவில் உள்ள தட்சசீலத்தில் நிறுவப்பட்டது. உலகெங்கும் இருந்து வந்த 10,500க்கும் அதிகமான மாணவர்கள் இங்கு கல்வி கற்றனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முறையே, மனித குலத்துக்கு அறிமுகமான முதல் மருத்துவ முறை. இம்முறை 2500 வருடங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது. கப்பலை செலுத்தும் கலை, சுமார் 6000 வருடங்களுக்கு முன் சிந்து நதிக்கரையில் பிறந்த ஒன்றாகும். 1896-ம் ஆண்டுவரை, உலகத்தில் வைரங்கள் கிடைக்கும் ஒரே இடமாக இந்தியா மட்டுமே இருந்துள்ளது. – இப்படி பல அபூர்வ தகவல்களைக் கூறுகிறார் ஆசிரியர். ஜெர்மானிய தத்துவஞானி மாக்ஸ்மூல்லர், நான் உலகம் முழுவதும் சுற்றி வந்து பார்த்ததில் உலகிலேயே சிறந்த செல்வமும் சக்தியும் அழகும் இயற்கையால் வழங்கப்பட்ட இடம் எதுவென்றால் நான் இந்தியாவைக் காட்டுவேன் என்று கூறியுள்ளதை வேறு அறிஞர்களும் வழிமொழிந்துள்ளனர். சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம்.
—
ஆங்கில மாயை, விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை-1, விலை 80ரூ.
ஆங்கிலம்தான் உலக மொழி, முற்போக்கு மொழி என்று பலரும் நினைக்கிறார்கள். அது வெறும் மாயை என்று கூறுகிறார் நூலாசிரியர் நலங்கிள்ளி. ஆங்கிலத்தைத் தோண்டத்தோண்ட வெளிவந்த இனவெறி கருத்துக்களையும், பெண்ணடிமைச் சிந்தனைகளையும் புராணக் குப்பைகளையும் கண்டு வெலவெலத்துப்போனேன் என்று கூறுவதுடன் தமிழ்தான் சிறந்த மொழி என்று அடித்துச் சொல்கிறார். நன்றி: தினத்தந்தி, 27 பிப்ரவரி 2013.