நில் கவனி கண்மணி
நில் கவனி கண்மணி, மார்பக நோய்களும் மருத்துவ தீர்வுகளும், டாக்டர் க. முத்துச் செல்லக்குமார், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-840-7.html
குழந்தைப் பருவம் முதல் ஒவ்வொரு கட்டமாக பெண்ணின் மார்பக வளர்ச்சி குறித்தும் ஒவ்வொரு பருவங்களின்போதும் அவை அடையும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகக் கூறும் நூல். மார்பகத்தில் புற்று நோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பெண்கள் தங்களுக்கு தாங்களே மார்பக பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும் அப்படிக் கொடுப்பதின் மூலம் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல செய்திகள் இருக்கின்றன. மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்படுவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை. மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் உடல் இயக்க மாறுதல்களாலும், ஹார்மோன் மாறுதல்களாலுமே அந்த வலி ஏற்படுகிறது என்று நூல் தெளிவுபடுத்துகிறது. அதுபோல மார்பகத்தில் பல்வேறு சாதாரண கட்டிகள் ஏற்படலாம். இந்தக் கட்டிகளைப் பார்த்துப் புற்றுநோய்க் கட்டிகள் என்று பயப்படத் தேவையில்லை. மார்பகங்களுக்கான தகுந்த உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பது, சருமப் பராமரிப்பு, குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் மார்பகங்களைப் பாதுகாக்கும் முறைகள் இந்நூலில் உள்ளன. மார்பகப் பாதுகாப்பில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுப் பழக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும், என்னென்ன உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம் எனவும் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய அளவிலும் உலக அளவிலும் நாளுக்கு நாள் மார்பகப் புற்று நோய் காரணமாக உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் சூழ்நிலையில் வெளி வந்திருக்கும் முக்கியமான நூல். நன்றி: தினமணி, 17/6/2013.
—-
எண்ணங்கள் ஓய்வதில்லை, ஜெயரதி அகஸ்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-2.html
20 சிறுகதைகளின் தொகுப்பு.
—-
2013 ராசிபலன்கள், ஏ.ஆர். பாலகிருஷ்ணாரெட்டி, விஜயா பதிப்பகம், 317, என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை 26, விலை 25ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-3.html
2013ம் ஆண்டின் ராசி பலன்கள், பரிகாரங்கள், பரிகாரத் தலங்கள் ஆகிய விவரங்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/11/2012,
