நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, தி. சந்தான கிருஷ்ணன், நிழல் வெளியீடு, பக். 140, விலை 150ரூ.

தனித்துவமான வில்லன் நடிப்பாலும், தன்னிகரற்ற நகைச்சுவை நடிப்பாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வென்றவர், டி.எஸ். பாலையா. இந்த நூல், அவரின் திரை வாழ்வை முதலில் இருந்து இறுதிவரை, படிப்பவர் கண் முன், படமாக விரிகிறது. கடந்த, 1941ம் ஆண்டிலிருந்து, 1971ம் ஆண்டு வரை, அவர் நடித்த அத்தனை திரைப்படங்களின் ஸ்டில்களுடன், சிலவரி கதை சுருக்கம், படத்தில் பாலையாவின் பங்கு என, முழுமையான தகவல்கள் தரப்பட்டுள்ளதில், நூலாசிரியரின் கடும் உழைப்பு தெரிகிறது. வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று, நடிப்பு முத்திரை பதித்த பாலையா, இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தவர். சொந்தக் குரலில் பாடியவர் என்ற விவரங்களும் இதில் உள்ளன. பாலையா பற்றிய பத்திரிகை பேட்டிகள், அவரின் வாரிசுகள் பற்றி, அவர்ந டித்த படங்களின் பட்டியல் ஆகியவை பின்னிணைப்பாக தரப்பட்டுள்ளன. மொத்தத்தில் தவற விடக்கூடாத நூல் இது என கூறலாம். -பாலகணேஷ். நன்றி: தினமலர், 19/4/2015.  

—-

ஸ்ரீ ஜானகி ராமாயணம், தீவி இராமாச்சார்யுலு (டி. ராம்பாபு), நர்மதா பதிப்பகம், விலை 100ரூ.

ராமாயணத்தை, சிதையின் கோணத்தில் இருந்து விவரிக்கும் நூல். சீதையை பற்றி பல புதிய தகவல்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *