நெஞ்சமதில் நீயா
நெஞ்சமதில் நீயா, வாணிப்ரியா, சுபம் பதிப்பகம், 15, மணிகண்டன் ஐந்தாவது தெரு, பழையவண்ணாரப்பேட்டை, சென்னை – 21, விலை 130 ரூ.
வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்ற பெண், தன் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுகிறாள், தான் சந்தித்த சவால்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறாள் என்று விளக்கும் நாவல்.
—
மனுமுறை கண்ட வாசகம், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், 1/3, நகர் விரிவாக்கம், துறையூர் – 621010, விலை 50 ரூ.
ராமலிங்க சுவாமிகள் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம் 43 வரிகளைக் கொண்டது. மனிதன் செய்யும் பாவச் செயல்களை பட்டியல் இட்டு அதில் விடுபடும் வழியும் கூறி இருக்கிறார். மேற்படி 43 வரிகளுக்கு விளக்க உரையுடன் கூறியுள்ளார் ஆசிரியர் ரெங்கராஜ தேசிக சுவாமிகள்.
—
தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா., கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98, விலை 45 ரூ.
ஒலைச்சுவடியில் முடங்கிக் கிடந்த தமிழ் இலக்கியங்களைத் தேடிக்கண்டுபிடித்து அச்சடித்து புத்தகமாக வெளியிட்டவர். “தமிழ்த்தாத்தா” உ.வே.சாமி நாதய்யர். அவருடைய பணிகளை விவரிக்கிறது, இந்நூல்.
—
நாகதோஷ (ராகு-கேது) பரிகாரங்கள், விஜயா பப்ளிகேஷன்ஸ், 317, என்.எஸ்.கே.சாலை, வடபழனி, சென்னை – 26, விலை 25 ரூ.
நாகதோஷம் என்றால் என்ன? அதற்கு பரிகாரங்கள் என்ன? கனவில் பாம்பைக் கண்டால் அதற்கான பலன்கள் என்ன? பாம்பை நேரில் கண்டால் அதற்கான பலன்கள் என்ன? பாம்புப் புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா? இதற்கெல்லாம் இந்த நூலில் பதில் கூறுகிறார், என். நாராயணராவ். ஜோதிட ரீதியாகவும் பல பலன்களைச் சொல்கிறார். சிறிய புத்தகத்தில் நிறைய விஷயங்கள். நன்றி: தினத்தந்தி 31-10-12