தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கெளதமன், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், பக்.420, விலை ரூ.370. அறம் என்ற ஒற்றை கருப்பொருளை மையமாகக் கொண்டு அதனைப் பல கோணத்தில் விளக்கிக்கூறும் நூல் இது. சங்க கால இலக்கியம் தொட்டு சமகாலச் சூழல் வரை மக்கள் மனதில் வேரூன்றப்பட்ட நெறிகள் அனைத்தையும் மேற்கோள்களைக் காட்டி வரையறுக்கிறார் நூலாசிரியர். கலித்தொகை, நாலடியார், ஐங்குறுநூறு, திருக்குறள் என தமிழ் மொழியின் மாண்பைப் பறைசாற்றும் இலக்கியங்கள் அனைத்தும் அறத்தை எவ்வாறு அறிவுறுத்துகின்றன? என்பது விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் அறம் தோன்றிய வரலாற்றையும், […]

Read more

பழஞ்சீனக் கவிதைகள்

பழஞ்சீனக் கவிதைகள், வான் முகில், மீனா கோபால் பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 216, விலை 180ரூ. ஆங்கில மூலத்திலிருந்த தமிழாக்கம் செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, 63 கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தருக்கடைந்தால் அது, தன் வீழ்ச்சிக்குத் தானே வித்திடலாகும். உன் பணி முடிந்ததும் பின்னடைந்திரு, விண்ணக வழி அத்தகையதே (பக். 75) என, மிகை வெற்றியின் அபாயம் குறித்தும். ஒளிமிகு சன்னலின் கீழ் என்னுடன் இருப்போர் யார்? இருவர் என் நிழலும் நானும், ஆனால் விளக்கு எரிந்து […]

Read more

நெஞ்சமதில் நீயா

நெஞ்சமதில் நீயா, வாணிப்ரியா, சுபம் பதிப்பகம், 15, மணிகண்டன் ஐந்தாவது தெரு, பழையவண்ணாரப்பேட்டை, சென்னை – 21, விலை 130 ரூ. வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்ற பெண், தன் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுகிறாள், தான் சந்தித்த சவால்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறாள் என்று விளக்கும் நாவல்.   —   மனுமுறை கண்ட வாசகம், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், 1/3, நகர் விரிவாக்கம், துறையூர் – 621010, விலை 50 ரூ. ராமலிங்க சுவாமிகள் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம் […]

Read more