நெஞ்சமெல்லாம் நீ

நெஞ்சமெல்லாம் நீ, சோம. வள்ளியப்பன், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 140ரூ.

எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் எழுதிய 24 சிறுகதைகள் கொண்ட நூல். கதைகள் ஏற்கனவே பிரபலமான பத்திரிக்கைகளில் பிரசுரமானவை. எனவே இலக்கிய அங்கீகாரம் பெற்ற சிறந்த கதைகள் என்பதை சொல்லத் தேவையில்லை. நன்றி: தினத்தந்தி, 26/3/2014.  

—-

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ.திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, விலை 160ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-181-6.html அவுரங்க என்ற சொல்லுக்கு அரசு சிம்மாசனம் என்றும், ஜேப் என்ற சொல்லுக்கு அழகு என்றும் பொருள். இந்த இரு பாரசீகச் சொற்களுக்கும், அழகிய அரசு சிம்மாசனம் என்று பொருள். தெற்கே தரங்கம்பாடி, நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என, விரிந்த பேரரசை ஆட்சி செய்தவர் மாமன்னர் அவுரங்கஜேப். அவுரங்கசீப் என்று சொல்லக்கூடாது. அவரங்கஜேப் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார் ஆசிரியர். மன்னரின் பல நல்லியல்புகளை இந்த நூல் விவரிக்கிறது. படித்துப் பாருங்கள். -எஸ். குரு. நன்றி: தினமலர், 9/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *