நோய் தீர்க்கும் காய்கறிகள்
நோய் தீர்க்கும் காய்கறிகள், பொன். திருமலை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-840-5.html
எந்த காய்கறி உடலுக்கு குளிர்ச்சி, எது உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எதை பயன்படுத்த வேண்டும், காய்கறி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, சர்க்கரை நோய் இருப்போர் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என்ன என்று உணவுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது இப்புத்தகம்.
—-
நம்பிக்கை மலரடும் சாதனைகள் தொடருட்டும், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-3.html
வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் நூல். க்ளமண்ட் ஸ்டோன் எழுதிய உலகப் புகழ் பெற்ற நூலை அழகிய நடையில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 28/11/2012.
—-
சங்கர காவியம் பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு (நாடக வடிவில்), டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், திருச்சி 2, பக். 480, விலை 250ரூ.
காஞ்சி மகா பெரியவரின் வாழ்க்கை வரலாறு நாடக வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 208 காட்சிகள். தொலைக்காட்சித் தொடராக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காஞ்சி மகானின் வரலாறை எழுதத் துவங்கியதாகவும், அதனை நாடக வடிவில் இந்த நூலில் மகானின் அருளால் அடக்கியதாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலில் அதற்கான முயற்சி நன்கு தெரிகிறது. சுவாமிகளின் பள்ளிக் காலம் தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் வாழ்க்கை அனுபவங்களை உரிய கதாபாத்திரங்களோடு பேச வைத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் சுவாமிகள் அந்தக் காட்சியில் உள்ள கதாபாத்திரங்களோடு உரையாடும் பாணி அழகாக அமைந்துள்ளது. மகான் நிகழ்த்திய அற்புதங்கள், மனமொடிந்து வந்த பக்தர்கள் சிலரின் மனத்துக்குத் தெம்பூட்டும் வகையில் அவர் பேசியது, சிலரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது உள்ளிட்ட அனுபவங்களைப் படிக்கும்போது, நமக்கும்கூட நல்ல வழி மனக்கண்ணில் தெரிகிறது. பொறுமையாகப் பேசி பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி அருளுரைப்பதைப் படிக்கும்போதே நம் கண்ணில் நீர் வழிகிறது. சுவாமிகள் முகாமிட்டிருந்த இடம் அங்கே நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வெகு சுவாரஸ்யமாக நாடக பாணியில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு. காட்சி 103 இல் விஷக்கடியால் கால் வீங்கிய கணவனை சுவாமிகள் முன் கிடத்தும் லம்பாடிப் பெண், அவரைக் காப்பாற்றுமாறு கேட்பதும், அதற்கு சுவாமிகள் நகைச்சுவையாகப் பேசி அவர்களுக்கு அருள்வதும் வித்தியாசமான வார்த்தைக் கோவைகள். காஞ்சி மகானின் பக்தர்களிடம் இந்த நூல் நிச்சயம் ஆனந்தக் கண்ணீரைத் தோற்றுவிக்கும். நன்றி: தினமணி, 19/8/2013.