பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும்
பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும், வை. மயில்வாகணன், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரச்சாரக்குழு, பக்கங்கள் 253, விலை 80ரூ.
கலாதர் என்னும் இயற்பெயர் கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின், பிறப்பு முதல் முக்திவரை உள்ள, அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்துத் தருகிறது இந்த நூல். காளிதேவியைக் கண்ணால் கண்ட ராமகிருஷ்ணர், தன் சீடர்களில் ஒருவரான விவேகானந்தருக்கு இறை ஆற்றலை வெளிப்படுத்திய விதம், இந்த நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த உலக வாழ்க்கையானது, இறைநிலையை அடைவதற்கு வழங்கப்பட்ட சாதனம் என்பதனை, இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. கறுப்பு, வெள்ளைப் படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று நூல் எளிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல். முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 03 பிப்ரவரி 2013.
—–
நட்டுமை, ஆர். நௌஸாத், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்கங்கள் 160,விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-047-5.html
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1930களில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் கிராம விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பின்புலத்தில் முஸ்லீம் மக்களின் பண்பாடு, வாழ்முறை, சமய நம்பிக்கைகள், பள்ளிவாசல் கொடியேத்து விழா, திருமணச் சடங்குகள் முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்துடன் நட்டுமை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது. தண்ணீர் களவையும், களவு ஒழுக்கத்தையும் குறிக்கும் நட்டுமை என்ற வட்டாரச் சொல்லால் நாவல் பிம்பப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி: த சன்டே இந்தியன், 10 பிப்ரவரி 2013,
