பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்
பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், 16/25, இரண்டாம் கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ.
இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட துமிழர்கள், அங்கு அடைந்த துயரங்கள், இழப்புகளை வாய்மொழி பாடல்களாக பாடியுள்ளனர். பல்வேறு சான்றோர்களால் சிலவற்றை பெ.முத்துலிங்கம் தொகுத்துள்ளார். இந்த பாடல்கள் மூலம், தமிழர்கள் இலங்கையில் கால் வைத்த நாள் முதலே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்ட விதம் விளங்குகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமா பாடல்மெட்டுடன் இணைத்து பாடியிருப்பது தொகுப்புக்கு சிறப்பு சேர்க்கிறது.
—-
சமகால மலையாள கவிதைகள், கவிஞர் சுகதகுமாரி, சாகித்ய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 135ரூ.
1950ஆம் ஆண்டிலிருந்து 1980ஆம் ஆண்டு வரை வெளிவந்த மலையாள கவிதைகளில், 50 கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 கவிதைகளை மலையாள கவிஞர் சுகதகுமாரி அருமையாக தொகுத்து இருக்கிறார். இந்த நூலை சா. சிவமணி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த கவிதை தொகுப்பில் நடப்பியல், முற்போக்கு சிந்தனை, புனைவியல் உள்பட பல பரிமாணங்களை காணமுடிகிறது. குறிப்பாக கவிதைகளில் எளிய நடையில், புரியும் விதத்தில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/7/13.