பிரபல கொலை வழக்குகள்
பிரபல கொலை வழக்குகள், எஸ்.பி. சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 200, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html
இப்படிக் கூடவா நடந்திருக்கும் என்று பலரால் வியந்து பேசும்படியான சம்பவங்களை உள்ளடக்கிய வழக்குகளை பிரபலமான வழக்குகள் என்று கூறுவோம். சமுதாயத்தில் புகழ் பெற்றவர் புரியும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளுக்கும் அப்பெயர் உண்டு. அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் பத்திரிகைகளில் தினமும் வெளியாகி, மக்களால் பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆங்கிலேயத் துரை ஆஷ் கொலை வழக்கு முதல் லட்சுமி காந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு, விஷ ஊசி வழக்கு, எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கு, மர்ம சந்நியாசி வழக்கு உள்பட 10 வழக்குகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள், எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்? எம்.ஜி.ஆரைச் சுட்டு விட்டு தன்னையும் நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொண்டார் எம்.ஆர்.ராதா. ஆனால் இருவரும் உயிர் பிழைத்துக் கொண்டனர். இது எப்படி?எம்.ஜி.ஆர். கொலை வழக்கு எப்படி நடத்தப்பட்டது? என்ன தீர்ப்பு வந்தது? இறந்து போன ஜமீன் இளவரச்ர ஒருவர் பல்லாண்டுகள் கழித்து சந்நியாசியகத் திரும்பி வந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமூம் அவர் மீது திரும்பியது. தான் இளவரசர்தான் என்பதை நிரூபிக்க நடத்தப்பட் வழக்கு விசாரணை, மர்ம நாவலை விட சுவாரஸ்யமானது. இப்படி ஒவ்வொரு வழக்குகளின் உண்மைப் பின்னணியும் விசாரணைகளும் படிக்க விறுவிறுப்பானவை. -பரக்கத். நன்றி: துக்ளக், 19/6/13.
—-
பழஞ்சீனக் கவிதைகள், மீனா கோபால் பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 180ரூ.
மேல்நாட்டு இலக்கியங்கள், தமிழில் நிறைய மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அளவுக்கு சீன இலக்கியங்கள் தமிழாக்கம் செய்யப்படவில்லை. அக்குறையை பழஞ்சீனக் கவிதைகள் என்ற இந்த நூல் போக்குகிறது. சீனப் பெருஞ்சுவர் எப்படி உலகை பிரமிக்க வைக்கிறதோ, அதுபோல் பிரமிக்க வைக்கக் கூடியவை சீனக் கவிதைகள். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சீனாவின் புகழ் பெற்ற கவிதைகளை, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். கவிஞர் வான்முகில், பல கவிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 29/5/2013.
