புதையல் புத்தகம்

புதையல் புத்தகம் (நூலாசிரியர் சா.கந்தசாமி, வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், தி.நகர், சென்னை 600 017.  பக்கம்: 272, விலை: ரூ. 150) To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html

வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, அரிய நூல்கள் பலவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் நூல் இது. ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாள் குறிப்பு கூறும் வரலாற்றுத் தகவல்கள், ஆர்மோனிய வணிகர் ஒருவர், தன் சொந்தப் பணத்தில், சைதாப்பேட்டை மர்மலாங் (இப்பொதைய மறைமலையடிகள் பாலம்) பாலத்தைக் கட்டியது, பெரியார் வெளிநாட்டுப் பயணத்தில், நிர்வாண சங்கத்தருடன் தானும், நிர்வாணமாக நின்று படம் எடுத்துக் கொண்டார். பாலை நிலம் என்பது வறண்ட பாலைவனமல்ல; ’பாலை’ என்னும் மரத்தின் பெயரால் குறிப்பிடப்ப்டுவது, வெ.சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் பற்றிய அரிய செய்திகள், அசோக சக்கரவர்த்தியின் மகனும், மகளும் பவுத்தம் பரப்ப, இலங்கை செல்லும் வழியில், காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி, சமயம் பரப்பியது, அறியப்படாத தமிழகம் பற்றி, தொ.பரமசிவன் கூறும் தகவல்கள் என, 47 அபூர்வநூல்களின் சாரத்தைப் பிழிந்து தருகிறது இந்நூல். – கவுதமநீலாம்பரன். நன்றி: தினமலர் (10-3-2013).

 —

பிற்கால சோழர் சரித்திரம் (நூலாசிரியர்: சதாசிவப் பண்டாரத்தார், வெளியீடு: ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32-பி, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், தி,நகர், சென்னை-600 017., பக்கம்:592, விலை: ரூ.260). To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-2.html

இன்றைய வரலாற்று ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் விளங்கிய சதாசிவப் பண்டாரத்தார், 1949ல் சோழர்களின் வரலாற்றை ஆராய்ந்து, முதற் பகுதியை ( கி.பி.849 முதல் 1070) வரை வெளியிட்டனர். இரண்டாம் பகுதியை, 1951 ல், இரண்டாம் பகுதியை ( கி.பி. 1070 முதல் கி.பி.1279 வரை) வெளியிட்டனர். கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்கட்டுகச் சற்றேறக் குறைய, 600 ஆண்டிற்குப் பிற்பட்ட சோழ மன்னர்களின் வரலாறு என்பதால், ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்று பெயரிடப்பட்ட இந்நூலில் அரசியல் முறை, கல்வி, கைத்தொழில், வணிகம், சமயநிலை, படை, நாகரிகம் எனப் பரவலாக அனைத்தும் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன். வரலாற்றின் முன்னோடி நூல் என்பதால், இதற்கெனத் தனிப்பெருமை உண்டு. நூலகங்களில் அவசியம் இருக்க வேண்டிய வரலாற்றுக் கருவூலமிது. – பின்னலூரான் நன்றி: தினமலர் (10-3-2013).  

பண்டியர் கால தமிழ் மக்கள் வரலாறு (நூலசிரியர்: க. ப. அரவணன், வெளியீடு: தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியுருப்பு, எம். ஆர். மருத்துவமனை அருகில் அமைந்தகரை, சென்னை 600 029., பக்கம்: 248, விலை: ரூ. 200). To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-1.html

‘பாண்டிய நாடு’ மிகப் பழம் பெருமை உடையது. அந்நாட்டின் பெருமைக் கொற்கை முத்து வரலாறும், அந்நாட்டு அரசரும், அறிஞரும், தமிழை முன்னிறுத்தி வளர்த்த, மதுரைத் தமிழ்ச் சங்க வரலாறும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழை வளர்ப்பதற்காகத் தனிச் சங்கம் ஒன்றைப் பாண்டியரை போல் அமைத்து நடத்தியதாக, சேர வரலாற்றிலோ, சோழ வரலாற்றிலோ சான்று இல்லை. திருக்குறள் அரங்கேற்றப்பட்டது கூட, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தான் என்பதும் சிறப்பாகச் சுட்டி காட்டத்தக்கது. பல புள்ளி விவரங்களோடு, பாண்டியர் காலத் தமிழ் மக்கள் வரலாற்றைச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். – எஸ்.குரு நன்றி: தினமலர் (10-3-2013).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *