புனித பூமியில் மனித தெய்வங்கள்
புனித பூமியில் மனித தெய்வங்கள், பதஞ்சலி, விடகன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக். 152, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-832-8.html
நல்லது, கெட்டது எதுவென சரியாகத் தெரியாமல் தடுமாறி வாழும் மனிதகுலத்தார், நன்னெறியில் செல்ல, இறைவனே மனித வடிவில் தோன்றி, தான் வாழும் முறையாலும், உபதேசங்களாலும் நெறிப்படுத்தினான் என்று பெரியோர்கள் கூறுவர். இறை தத்துவத்தையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும், பக்தி இலக்கியங்கள் வாயிலாகவும், பாடல்கள் மூலமாகவும் பரப்பிய பல மகான்களின் வாழ்க்கையே நமக்கு சிறந்த வழிகாட்டியாகும். இந்நூல் பக்த மீரா உட்பட 25 பேரின் வாழ்வை விவரிக்கிறது. மனதை செம்மைப்படுத்தும் இது போன்ற நூல்களே. ஆன்மிகத்திற்கு ஆக்கம் தருவனதாகும். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 25/12/2011
—-
100 கறி வகைகள், தஞ்சாவூர் ராஜம் அனந்தராமன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-709-0.html
பலவிதமான பொடிகள், கூட்டுவகைகள், அவியல் வகைகள், கீரை சமையல், மசியல் வகைகள், வறுவல், பொரியல் என, பலவகையான சமையல்களின் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் உபயோகிக்கக்கூடிய, எளிதில் கிடைக்கக் கூடிட பொருட்களே, சமையலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சமையல் தெரியாதவர்கள் இந்நூலைப் படித்து எளிதில் சமைக்கலாம். புதிதாக திருமணம் செய்த பெண்கள், திருமணம் செய்யப்போகும் பெண்கள், சமையல் பற்றி அறிய இந்நூல் வாங்கிப் பயன்படுத்தலாம். -ஆரா. நன்றி: தினமலர், 25/12/2011