பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்
பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்(சமூக நாவல்), தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 150ரூ.
ஒரு முழுமையான திரைப்படத்திற்கு தேவைப்படும் குடும்ப நிகழ்வுகள், காதல், வீரம், தியாகம், சோகம், அரசியல் செல்வாக்கும், பணபலமும் நிறைந்த ஆதிக்க சக்தி, இறுதியாக சுப நிகழ்வுகள் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு சமூக நாவல். கதாநாயகி பூவரசி ஒரு டாக்டர். தன்னையும், உடன்பிறப்புகளையும் தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் மறைந்து விடுவதால் அவர்களை ஆளாக்க தன்னை தியாகம் செய்கிறாள். அவளை தன் வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறான் ஒருவன். அவளுக்கு பாதுகாவலனாகவும், டிரைவராகவும் செயல்படுகிற கதாநாயகன் பிரபு உண்மையில் யார்? அதற்கான விடையும், அதைச்சுற்றி பின்னிப் பிணைந்துள்ள நீதிநெறிமுறைகளையும் நூலாசிரியர் தஞ்சை செல்வன் தெளிவாகக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.
—-
ராஜகம்பீர ஸ்ரீசிம்ம விஷ்ணு, கண்ணன் மகேஷ், சாரதம்பாள் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.
கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த பல்லவ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று புதினம். இந்த வரலாற்று நூலின் கதாநாயகன் சிம்ம விஷ்ணு பல்லவன். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி. இவன்தான் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியை ஒழித்துப் பல்லவ பேரரசை விஸ்தரித்தவன். சரித்திரத் தகவல்களை பின்னணியாகக் கொண்டு, சிறந்த கற்பனை நயத்துடன் இந்த நாவலை படைத்திருக்கிறார் கண்ணன் மகேஷ். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.