பெண் ரகசியமற்ற ரகசியங்கள்
பெண் ரகசியமற்ற ரகசியங்கள், அருவி, 10, 6வது செக்டார், கே.கே. நகர், சென்னை 78, விலை 150ரூ.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருகிற இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னவெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று கோடிட்டு காட்டி இருப்பதுடன் அந்தப் பிரச்சினைகள் வராமல் காக்கவும் வழிமுறைகள் கூறி இருப்பது சிறப்பு. பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என அறிகிறபோது, பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பெண்கள், பெண் பிள்ளையை பெற்றவர்களின் பெண் பிள்ளைகள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 22/5/13
—-
நரபட்சணி, சாகித்திய அகாதெமி, குணாபில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 235ரூ.
டாகூர்சிங் என்ற சிறுமுதலாளி பிரீத்பால் என்ற முற்போக்கு எண்ணம் கொண்ட அவனுடைய மகன், சிங்காரா சிங் என்ற தொழிலாறி, அவன் மனைவி சுலோசனா ஆகியோருக்கு இடையே நடக்கும் மனப்போராட்டம்தான் நரபட்சணி என்ற இந்த நாவல். நானக் சிங் எழுதிய இந்த பஞ்சாப் நாவலை, முத்துமீனாட்சி தமிழாக்கம் செய்துள்ளார். இந்த நாவல் விறுவிறுப்பாக இருப்பதுடன் சுவாரசியத்தையும் அதிகப்படுத்துகிறது. சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 22/5/13
—-
மூன்றாம் அரங்கம், ஆ சிவாசாந்தகுமார், கிடைக்குமிடம்-விஜயாலயா, வி.ஜி.பி.ஹில் ரிசார்ட், அப்சர்வேட்டரி அஞ்சல்,கொடைக்கானல் 3, விலை 150ரூ.
முதலாம் அரங்கம் என்பது தெருக்கூத்து. இரண்டாம் அரங்கம் என்பது மேடை நாடகம். மூன்றாம் அரங்கம் என்பது வீதி நாடகம். ஒப்பனை இன்றி ஒலிபெருக்கி இன்றி இயற்கையான நடிப்பின் மூலம் மக்களுக்குப் பயனுள்ள கருத்துக்களை எடுத்துக் கூறுவது வீதி நாடகம், முன்பு நடத்தப்பட்ட வீதி நாடகங்களைப் பற்றிக் கூறும் ஆசிரியர். வீதி நாடகத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். நன்றி: தினத்தந்தி, 22/5/13