போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி-4, குருவைஷ்ணவி அப்பார்ட்மெண்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html

ஏறத்தாழ 1380 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவைச் சேர்ந்த புத்தமத துறவி யுவான் சுவாங், புத்தமதம் தோன்றிய இந்தியாவை நேரில் காண வேண்டும் என்ற வேட்கையுடன் உயிரை துச்சமாக மதித்து மேற்கொண்ட புனித பயணத்தை வறட்டு வரலாற்று குறிப்புகளாக அல்லாமல், விறுவிறுப்பும், திடீர் திருப்பங்களும் நிறைந்த நாவலாக ஆக்கித்தந்து இருக்கிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து. பாராட்டத்தக்க புதிய முயற்சி. யுவான் சுவாங் சென்ற வழித்தடத்தில் பல பகுதிகளை நேரில் பார்வையிட்ட அவரது உணர்ச்சிகள் இதில் பின்னிப் பிணைந்து இருப்பதால், நாமும் யுவான் சுவாங்குடன் பயணிப்பது போன்ற மெய்சிலிர்க்கும் அனுபவத்தை உணர முடிகிறது.  

—-

 

மனிதனின் நிரந்தர தேடல், யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா, யோகதா சத்சங்க மடம், 21, யூ.என்.முகர்ஜி ரோடு, தச்சினேஸ்வரர், கொல்கத்தா 700076, விலை 150ரூ

பரமஹம்ச யோகானந்தரின் சொற்பொழிவுகளை கொண்ட அற்புத தொகுப்பு. 1893-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பிறந்து 1952-ல் மறைந்த இந்த மகான், உலகம் முழுவதிலும் இந்து மத கருத்துக்களை பரப்பியதில் முக்கியமானவர். இந்து தத்துவத்தை அற்புத வகையில் அமெரிக்காவிலும், மேலைநாடுகளிலும் பரப்பியதற்கு நாம் யோகானந்தருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று காஞ்சி பெரியவர் குறிப்பிட்டு இருக்கிறார். மன அமைதியின்மை அதற்கான காரணம் மற்றும் நிவாரணம், மறுபிறவி, ஏசு மீண்டும் பிறப்பாரா? என பல்வேறு தலைப்புகளில் 791 பக்கங்களில் அவரது சொற்பொழிவுகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இறைபக்தி உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.  

—-

 

காசி முதல் மன்னார் வளைகுடா வரை, டாக்டர், சே. குமரப்பன், மல்லிகை பதிப்பகம், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம் 630302, விலை 40ரூ

காசி விசுவநாதர் கோவிலில் தொடங்கி காசிநகர சத்திரங்கள், வடஇந்திய நகரங்களில் இருக்கும் விடுதிகள், நகரத்தார் சமூகத்தினரின் கடல்கடந்த திருப்பணிகள் என்று பல்வேறு தகவல்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நூல் ஆசிரியர் டாக்டர் சே. குமரப்பன் சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டியைச் சேர்ந்தவர். ஆகவே தங்கள் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப்புலவர்கள் பற்றியும் கூறியிருக்கிறார். அத்துடன் சர்வதேச அளவில் வழங்கப்படும் பரிசுகள், மன்னர் வளைகுடாவில் வாழும் அரியவகை உயிரினங்கள் என்றுஅறிவியல் தகவல்களும் இப்புத்தகத்தில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 30-1-2013.

Leave a Reply

Your email address will not be published.