மக்கள் சமூகத்தின் மனசாட்சி

மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 150ரூ.

சிறந்த சிறுகதைகள் பலவற்றை எழுதி விருதுகள் பெற்றவரான பாரதி வசந்தன் எழுதியுள்ள கட்டுரைத் தொகுதி மக்கள் சமூகத்தின் மனசாட்சி. இலக்கியம், கலை, அரசியல், சமூகப் பிரச்சினைகள் என்று பல்வேறு பொருள்கள் பற்றிய 17 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல்கலைக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. சுதந்திரப் போரில் பங்கு கொண்ட நாடகக் கலைஞர் விஸ்வநாததாஸ், மணிலாசனத்தில் அமர்ந்தபடி தேசபக்திப் பாடல்களை பாடிக்கொண்டே உயிர்நீத்த சம்பவத்தைப் படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. மகாகவி பாரதியார் உயிர் நீத்தபோது அவர் உடலோடு மயானத்துக்கு சென்றவர்கள் ஆறேழுபேர். கண்ணதாசனுக்கு முன் சிறந்த திரைப்படக் கவிஞராகத் திகழ்ந்த கம்பதாசன் இறந்தபோது, மயானத்துக்கு சென்றவர்கள் மூன்றே பேர் என்று அறியும்போது நெஞ்சம் கனக்கிறது. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.  

—-

சிறுதுளி பெருவெள்ளம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 85ரூ.

பணக்காரர் ஆவதற்கு வழிகள் பலவற்றையும், தக்க உதாரணங்களுடன் விரிவாக சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். நன்றி: தினத்தந்தி, 15/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *