மண்ணை அளந்தவர்கள்
மண்ணை அளந்தவர்கள், முனைவர் பழ, கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 72, விலை 35ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-4.html
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை அளந்து எகிப்தியர்கள் அதைப் பதிவு செய்திருக்கின்றனர். கி.பி. 300ல் ரோமில் நில அளவை நடந்ததற்கான குறிப்பு காணப்படுகிறது. அட்லஸ் எனப்படும், நில வரைப்படத்தை, முதன் முதலில் பாபிலோனியர்கள் உருவாக்கியிருக்கின்றனர். கிரேக்க வானியல் அறிஞர் டாலமி முதன் முதலில், பூமியைக் கோள வடிவில் வரைந்துள்ளார். இந்தியாவின் முதல் பெரிய நில அளவை, சென்னையில் இருந்துதான் தொடங்கியது. அதுவும், புனித தாமஸ் மலையில் இருந்து தான் தொடங்கியது. முதலான பல செய்திகளைத் தருகிறது இந்நூல். வரலாறு நில அளவை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள், இந்த நூலைக் கையில் எடுத்தால் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பார்கள். -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 28/7/2013.
—-

ஒரு பார்வையில் சென்னை நகரம், அசோகமித்ரன், கவிதா பப்ளிகேஷன் To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-098-0.html
இன்றைய காலகட்டத்தில் தி.நகரில் இருந்து அடையாறுக்கு செல்ல வேண்டுமென்றால் எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் 50, 60 ஆண்டுகளுக்கு முன், தி.நகரில் இருந்து நடந்துதான் அடையாறு செல்ல வேண்டும். சைக்கிள் உள்ளோர் சைக்கிளில் செல்லலாம். அப்போது கோட்டூர்புரம் வழி கிடையாது. அங்க அடையாறை கடக்க படகில்தான் செல்ல வேண்டும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அன்றைய காலகட்டத்தில் சென்னையின் அதிநவீன சினிமா கொட்டகையாக ராயப்பேட்டை பைலட் திரையரங்கம் விளங்கியது என்று சொன்னால் இன்று நம்ப முடிகிறதா? 60 ஆண்டுகளுக்கு முன் சென்னை எப்படி இருந்தது என்பதை வார்த்தை ஓவியங்களால் இதில் அசோகமித்ரன் படம் பிடித்து காட்டுகிறார். சென்னையை பற்றிய சுவாரசியமான விஷயங்களை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். மொத்தம் 160 பக்கங்களுடன் நூல் வெளிவிந்ததிருக்கிறது. இதை கன்னிமாரா நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர், 28/7/2013.2
