மரண வலையில் சிக்கிய மான்கள்
மரண வலையில் சிக்கிய மான்கள், வெ. தமிழழகன், அறிவுப் பதிப்பகம், 16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 180ரூ.
விறுவிறுப்பு, சிக்கல்கள், திகில், அதிர்ச்சி, வியப்பு, மாயாஜால காட்சிகள் என ஒரு திரைப்படத்தை பார்த்ததுபோல பலதரப்பட்ட அனுபவம் இந்த குறுநாவலைப் படிக்கும்போது நமது எண்ணத்தில் தோன்றும். அடுத்து நடப்பது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டி ஆர்வத்தோடு படிக்கும்படியாக அமைக்கப்பட்டது இந்நூல்.
—-
புதுக்குறள், தளவை வே. திருமலைச்சாமி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 240ரூ.
திருக்குறளை புதுக்குறளாக பார்க்கும் தைரியம் எல்லாருக்கும் வந்துவிடாது. கவிஞர் தளவை வே. திருமலைச்சாமிக்கு வந்திருக்கிறது. உலகம் கொண்டாடும் திருக்குறளை முன்வைத்து தனது பாணியில் புதுக்குறளை எடுத்தாண்டிருக்கிறார். இந்த கவிஞர் இதென்ன திருக்குறள் வரிசையில் புதுக்குறள் என்ற எண்ணம் அலைகளாய் மனதை வியாபித்தாலும் புதுக்குறள்களின் இலக்கண வரம்பில் அழகு வார்த்தைகளின் அணிகலன்களில் கவனிக்க வைத்திருக்கிறார் கவிஞர். புதிய முயற்சி.
—-
கலைஞர் நல வெண்பா, ம. அரங்கநாதன், விழிமலர் பதிப்பகம், தேன்மழை இல்லம் முதன்மைச் சாலை, ஆப்பரக்குடி, கச்சனம் 610201, திருவாரூர் மாவட்டம், விலை 50ரூ.
தி.மு.க, தலைவர் கருணாநிதியை பாட்டுடை தலைவராக கொண்டு படைக்கப்பட்டுள்ள 303 வெண்பாக்கள் மூலம் அவரின் வாழ்வியலை அழகு தமிழில் விவரிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 24/7/13.