மானுடப் போராளி

மானுடப் போராளி, சி.கெ. மாதவன், என்.எஸ். பிரதாப் சந்திரன், இன்சுவை பதிப்பகம், அண்ணாதெரு, ஞாயிறு கிராமம், சென்னை 67, விலை 70ரூ.

தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு போராட்டங்களை வழி நடத்தி சென்ற கம்யூனிஸ்டு இயக்கவாதி சி.கெ.மாதவனின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தொகுத்து வழங்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 4/9/2013.  

—-

 

உமர்கய்யாமின் ருபாயத், கவிஞர் புவியரசு, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் 1, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-102-5.html

கீழ்த்திசை சிந்தனை மரபு என்ற வகையிலும் தமிழ்ச் சித்தரியலோடு ஒத்திசைகிற சூஃபிக்களின் ஞானமார்க்கப் பிரதிபலிப்பு என்கிற நிலையிலும் உமர்கய்யாமின் படைப்பு தமிழ்ச் சமூகத்துக்கு நெருக்கமான ஒன்றாகவே உணர முடிகிறது. அலங்காரம், ஆடம்பரம் நிறைந்த சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்து மனித மனதை இறைநிலைக்கு உயர்த்தும் முயற்சியாகவே நமது சித்தர்கள் காடு, மேடுகளில் அலைந்து திரிந்தும் இருள் குகைகளில் மறைந்திருந்தும் ஞானத்தைப் பரப்பினர். சூஃபிக்களும் இது போன்றே சனாதன எதிர்ப்பு, சடங்கு மத எதிர்ப்பில் இயங்கினர். இப்போக்குதான் உமர்கய்யாமில் குவிமையம் கொள்கிறது. எதிர்கால சுவர்க்கக் கனவுகளை வாரி வழங்கிய மதவாதிகளின் மாயாஜால வார்த்தை விளையாட்டுகளுக்கும், மூடச்சடங்குகளுக்கும் அவர் எதிராகப் பாடினார். அதனால் அவர் தமது காலத்திலேயே ஒரு கலகக்காரராகவும், மதவாதிகளின் எதிரியாகவும் சித்திரிக்கப்பட்டார். என்றாலும் அவர் ஒரு நல்ல இஸ்லாமியராகவும், மற்ற சமயங்களின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார் என்பதை ருபாயத் தெளிவாகப் புலப்படுகிறது. உன்மொழியில் என் சிந்தனையை மேம்படுத்துவதே நல்ல மொழிபெயர்ப்பு எனும் பாப்லோ நெருடாவின் இலக்கணத்தை புவியரசுவின் மொழிபெயர்ப்பு சிறப்பாகவே வெளிப்படுத்துகிறது. அத்தோடு, வாங்கிப் படிக்கும் வகையில் விலையும் நூல் கட்டமைப்பும் உள்ளது தனிச்சிறப்பு. நன்றி:தினமணி, 9/1/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *