யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள், அகமுக சொக்கநாதர் குருஜி, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ.

சித்தர்கள் பலரும் படிப்போர் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை மறைமுகமாகவே கூறியுள்ளனர். அவ்வாறாகக் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை தம் ஆய்வுமுறை அறிவுடன் விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர் அகமுக சொக்கநாதர். அகமுகர் என்போர் சித்தர்களே, சித்தர்களின் கருத்துக்களோடு பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை ஒப்பிட்டு இந்நூலில் விளக்கியுள்ளார். இந்தியாவின் சிறந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் நிறுவியவர்கள் தமிழர்களே. இந்திய மொழிகளின் தாய்மொழி தமிமு. மார்க்ஸ் முல்லரின் நாட்குறிப்பினைச் சுட்டித் தன் கருத்தை நிறுவுகிறார் நூலாசிரியர். பொருத்மான ஓவியங்கள் சில சேர்க்கப்பெற்றுள்ளன. -ம. நா. சந்தான கிருஷ்ணன். நன்றி: தினமலர் 20/11/11.  

—-

திருக்குற்றாலக் குறவஞ்சி, புலியூர்க் கேசிகன் உரை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32,பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, பக். 152, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-036-7.html குறிஞ்சி நிலக் குறவர்கள் கலைவளம் மிக்கவர்கள். நடன அரங்கிலும், திரை அரங்கிலும் சிங்கனும், சிங்கியும் ஆடுவதைக் கண்டு முகம், அகம் மலர்வது உண்டு. மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியைப் பேசாத இலக்கிய வரலாறே இல்லை எனலாம். மிகுந்த எளிமை, இனிமை, இசைநயம் மிக்க பாடல்கள், நாடோடிப் பாடல்களாக இல்லாமல் நாடிச்சென்று பாடி ஆடும் தரம் மிக்கதாக இந்த குறவஞ்சி முதன்மை பெற்றுள்ளது. அருவி பாய்ந்து ஓடும் திருக்குற்றால மலையின் குளிர் சாரல், படிப்பவரையும் நனைத்துவிடுகிறது. குற்றாலநாதரைக் கண்டு வசந்த வள்ளி காதல் கொள்வதும், அவள் பந்து ஆடுவதும் தாளநயத்துடன் படிப்பவரை ஆடவைக்கிறது. செங்கையில் வண்டு கவின்கவின் என்று செயம் செயம் என்று ஆட என்ற பந்தாட்டப்பாடல், திரைப்பாடலிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குறத்தி குறிகூறுவது சிறப்பாக விளக்கவும் பெற்றுள்ளது படிக்கவும், பாடவும், ஆடவும் ஏற்ற நடன நூல். -முனைவர் மா. கி. ரமணன். நன்றி: தினமலர் 20/11/11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *