வந்தாங்க ஜெயிச்சாங்க,
வந்தாங்க ஜெயிச்சாங்க, மணவை பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 402, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 207, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-879-7.html
சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சாதனையாளர்களைப் பற்றி மட்டும் போதித்தால் போதுமா? அவர்களின் மனதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளையும் சேர்த்துத் தந்தால்தான் அது முழுமையடையும் என அவர்களின் மொழிகளிலேயே கொட்ட வைத்திருக்கிறார் ஆசிரியர். வைரமுத்து முதல் மயில்சாமி வரை கலைத்துறையைச் சேர்ந்த 70 சாதனையாளர்களின் வாழ்க்கையை சாறாக்கித் தரும் உத்தியிது. சாதனையாளர்களின் குடும்பப் பின்னணி, கால் பதித்த களம், ஆதரித்தோர், விரட்டியோர், பட்ட வலி என்று பல சாதனைகளின் சரித்திர சுருக்கத்தை பேசும் நூல் இது. சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஒவ்வொரு வி.ஐ.பி.யையும் விட்டு வகுப்பு எடுக்க வைத்திருக்கிறார். வந்தவர்கள் ஜெயித்த கதையைச் சொல்லி, தானும் ஜெயித்துள்ளார் மணவை பொன். மாணிக்கம். நன்றி; குமுதம், 11/9/2013
—-
பெஞ்சமின் பிராங்க்லின் (தன் வரலாறு), தமிழில்- கா. அப்பாத்துரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை 98, பக். 367, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-000-2.html
ஒரு சிறந்த மனிதன் தான் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவங்களை எதிர்கால தலைமுறையினருக்குப் பாடமாக விட்டுச் செல்லும் நோக்கத்தில் சுயசரிதை எழுதத் தொடங்குகிறான். அந்த வகையில் அமெரிக்க அறிஞரான பெஞ்சமின் பிராங்க்லினின் இந்த தன் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெஞ்சமின் பிராங்க்லின் எழுதியவை யாவும் பெரும்பாலும் பயன் கருதியவையே. இந்த தன் வரலாறும் அதற்கு விலக்கானதன்று. மனிதன் இயல்பிலே கெட்டவனல்ல. நல்லவனே. இந்த நம்பிக்கையின் அடிப்படையாகத்தான் மனித இனம் இன்ப வாழ்வை நோக்கி முன்னேற முடியும். இதையே நான் எப்போதும் என் உறுதியான கோட்பாடாகக் கொண்டிருக்கிறேன் என பெஞ்சமின் பிராங்க்லின் குறிப்பிடுகிறார் இந்தத் தன் வரலாற்று நூலை எளிமையான தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை. நூலில் பொரிதந்து கிடைக்கும் பெஞ்சமின் பிராங்கலின் வாழ்க்கைக் குறிப்புகள் ஏராளம். வளரும் இளம் தலைமுறையினர் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். நன்றி; தினமணி, 10/9/2012.