வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதைகள், ஆலந்தூர் கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை ரூ. 170
எளிமையான கவிதைகளுக்குப் பெயர் பெற்றவரான ஆலந்தூர் கோ.மோகனரங்கன், பள்ளிகளில் தமிழ்ப்பாட நூல்களின் வாயிலாக அறிமுகமானவர். அவரது தொகுப்பின் நான்காம் பாகம் இது. எளிமையும் இனிமையும் கலந்த இவரது கவிதைகள் இதுவரை இதுபோன்ற பெரிய தொகுப்பாக வந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டியது.
—
வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள், கலியராஜன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை ரூ. 100
திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நுட்பமாக ஆராயும் நூல். எல்லா கருத்துகளையும் சிறுகதை சம்பவங்கள் போல அளித்திருப்பது படிக்க சுவையைத் தருகிறது. திருக்குறளுடன் ஒத்திசையும் பல்வேறு தமிழ் இலக்கிய செய்யுள்களும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. அரசியல் தடாலடி விமர்சனங்களும் இருக்கின்றன.
—
மாணவர்களுக்கு பகவத் கீதை, தொகுப்பு: சுவாமி ஆத்மச்ரத்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை, விலை ரூ. 20
பகவத்கீதையின் முக்கிய கருத்துகளை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும் சிறு நூல் இது. இது தவிர கீதையைப் பற்றி சுவாமி விவேகானந்தர், பரமஹம்சர், மகாத்மா காந்தி, கவர்னர் ஜெனரல் வாரண் ஹேஸ்டிங்ஸ் முதலியவர்களின் கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன.