விழுங்கப்பட்ட விதைகள்

விழுங்கப்பட்ட விதைகள், தி. திருக்குமரன், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1, 

இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த தமிழர் தி. திருக்குமரன். ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கும் இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. போரினால் சிதையுண்ட சமூகத்தின் தனிமனித, மனநல, காதல், காம வாழ்வின் அவலங்களை இவர் கவிதை ஆக்கியுள்ளார். ஒரு மண்ணும் மிஞ்சாத உயிர்வாழ்க்கை பூமியில் நமக்குத்தான் மட்டுமல்ல நதிக்கும்தான் எம் பயணக்குறிப்புகள் கடற்கரைகளிலும் காடுகளிலும் இறகுகளாயும் இறந்துபோய்விட்ட எம் தோழர்களின் என்புக்கூடுகளாயும் எம் நெடுவெளிப்பயணத்தின் கதைகளைப் பேசியபடி கிடக்கும் என்கிற வரிகளின் அனுபவ வேதனை உருக்கமானது. விழுங்கப்பட்ட விதைகள் என்ற இந்த கவிதை நூலின் தலைப்பு விதைகள் முளைக்கும் என்கிற நம்பிக்கைத் தொனியைத் தருகின்றன.    

கிராம்ஷியின் சிந்தனைத் திரட்டு, இஎம்எஸ் நம்பூதிரிபாட், பி. கோவிந்தபிள்ளை, மொழிபெயர்ப்பு ஜி.கே. பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், 421 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18,

இத்தாலியின் தெற்குப்பகுதியைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அந்தோணிய கிராம்ஷி. நம் நாட்டுக்கும் அங்கும் உள்ள ஒற்றுமை தெற்குப் பகுதியை விட வடக்கு இத்தாலியில் செல்வ செழிப்பும் அதிகாரமும் படைத்த பிரபு வம்சக்குடும்பத்தினர் இருந்தார்கள். கிராம்ஷிக்கு சிறுவயது முதலே கூன்முதுகு பிரச்சனை இருந்தது. அதைச் சரிசெய்ய நிறைய மருத்துவம் செய்தார்கள். ஆனாலும் சரியாக வில்லை. இத்தாலி கம்யூனிஸ்ட்கட்சி நிறுவன தலைவர்களில் இவர் ஒருவர். அகில உலக கம்யூனிஸ்ட் அமைப்பில் அங்கம் வகித்தார். இத்தாலியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் கிராம்ஷிதான். நாடாளுமன்றத்தில் இவரது கன்னிப் பேச்சைக் கேட்கும்போது இத்தாலி அதிபரின் முகபாவங்கள் எப்படியெல்லாம் மாறின என்று டைம்ஸ் பத்திரிகை படம்பிடித்து வெளியிட்டது. கிராம்ஷி சிறந்த சிந்தனையாளர். அவர் குழு வழியிலான ஆயுதப் போராட்டங்களை தவிர்க்க விரும்பவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் கருத்துப் பரவலாக்கம் செய்யாமல் செய்யும் புரட்சி வெற்றிபெறாது என்று சொன்னார். அதற்கு உலக நாடுகள் பலவும் சாட்சியாக உள்ளன. கிராம்ஷி கைது செய்யப்பட்டு அவரது சிந்தனையைத் தடுப்பதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வெளிச்சமற்ற அறையில் அவர் பூட்டப்படுகிறார். அங்கே இருந்த சானிடரி பேப்பரில் பல்லாயிரம் பக்கங்கள் அவர் தன் சிந்தனைகளை எழுதினார், அது உலகமெங்கும் பரவியது. கிராம்ஷியின் சிந்தனைத் திரட்டு என்ற இந்த நூல் எல்லோருமே படிக்கவேண்டிய நூல். -இயக்குநர் மணிவண்ணன். நன்றி: அந்திமழை, 26 செப்டம்பர் 2012.

Leave a Reply

Your email address will not be published.