வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு
வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு, ரேமண்ட் கார்வர், தமிழில் செங்கதிர், எம். கோபாலகிருஷ்ணன், க. மோகனரங்கன், விஜயராகவன் வெளியீடு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 200ரூ.
இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் யதார்த்தவாத சிறுகதை மரபை மீட்டவர். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தமிழ்மொழி பெயர்ப்பே வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யதார்த்தவாதம் என்பது இன்னும் வீரியமான கதை சொல்லல் விதமாகவே உள்ளது என்பதை இக்கதைகளை வாசிக்கையில் உணரமுடிகிறது. ஒரு சிறிய நல்லகாரியம் என்கிற கதையை இத்தொகுப்பில் உள்ள சிறந்தகதைகயாக எளிதில் கூறிவிட முடியும். சண்டையிடுவதற்காக ஒருவனிடம் செல்லும் தம்பதியினர் அவனுடன் பேசிப் புரிந்துகொள்ளும் அழகான கதை. அது போலவே அடுத்த வீட்டுக்கார்கள் அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை. பெட்டிகள் உள்ளிட்ட கதைகளும் மனதைத் தைக்கின்றன. மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. யதார்த்தவாத சிறுகதைகளின் முக்கியத்துவம் பற்றிய தொகுப்பாளர் செங்கதிரின் நீண்ட முன்னுரையும் குறிப்பிடத்தக்கது. நன்றி: அந்திமழை, 1/2/2014.
—-
பல்துறை நோக்கில் ஆய்வுச் சிந்தனைகள், முனைவர் தே. சம்பத், தமிழ்மாமணி பதிப்பகம், எச். 255, நாவல்பட்டு, அண்ணாநகர், திருச்சி 56, விலை 100ரூ.
இலக்கியம், இதழியல், கல்வியியல், பொருளியல், அறிவியல், அறிவியல் தமிழ் போன்ற துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 10/10/2012.