வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர், சேனானி, கன்னடத்திலிருந்து தமிழில்-பா. வண்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.175. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html

பீடி, சிகரெட்டெல்லாம் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. அநத்ப் பழக்கத்தையெல்லாம் விடறதுக்கு இது நல்ல நேரம் என்றாள் அவன். அவனுடைய உபதேசத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீ ஒரு வேலை செய். தினம் ஒரு வேளை சாப்பாட்டை வேணும்னாலும் நிறுத்து. கவலை இல்லை. ஆனால் பீடி மட்டும் கண்டிப்பா வேணும் என்று வற்புறுத்தினேன். இந்த உரையாடல் நடந்த இடம் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் காடு. இதை எழுதியிருப்பவர் கிருபாகர் என்ற புகைப்படக்காரர். இவரும் இவருடைய கூட்டாளியான சேனானியும், வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் வைக்கப்பட்டபோது நடந்த உரையாடல் இது. தன்னுடைய உயிர் எந்த நேரத்தில் பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருந்த கிருபாகருக்கு வீரப்பன் செய்த உபதேசம்தான் மேலே சொல்லப்பட்டது. வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு பல்லாண்டுகள் ஆன பிறகும் வீரப்பன் சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு மவுசு இருக்கிறது. கற்பனைகளுக்கும் கிராக்கி இருக்கிறது. இரண்டு புகைப்படக்காரர்களும் வீரப்பனிடம் கைதியாவதில் தொடங்கி, விடுதலை செய்யப்பட்டு வீடு வந்து சேர்வது வரை பதினான்கு நாட்கள். இந்தப் பதினான்கு நாட்களின் பரிதவிப்பை, மிரட்சியை, கல்க்கத்தை, பசியை, ஆர்வத்தை, பதிவாகக் கொடுக்கிறது இந்தப் புத்தகம். நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் இதில் நகைச்சுவையும் இருக்கிறது. மனிதர்கள் அதிகம் புழங்காத அந்தக் காட்டுப்புரத்தின் கதகதப்பை, அரவணைப்பை ரசித்ததோடு மட்டுமல்லாமல் அதை வர்ணனையாய் நமக்கும் கொடுத்திருக்கிறார்கள் இந்தப் பயணக் கைதிகள். வீரப்பன் பிடியில் சிக்கி உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்துவிட்டதால் இந்த வர்ணனையை நம்மால் படிக்க முடிகிறது. நன்றி: கல்கி, 2/3/2014.  

—-

சேக்கிழார் பிள்ளைத்தமிழ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, விலை 580ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-789-8.html

சேக்கிழார் பிள்ளைத் தமிழ், புகழ்பெற்ற இலக்கிய நூல். வித்துவான் பாலுர் கண்ணப்ப முதலியார் எழுதிய மூலமும் உரையும், நீண்ட இடைவெளிக்குப் பின், சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *