வெற்றிப் படிக்கட்டு
வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2), ஹெச். வசந்தகுமார், வசந்த அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ.
வசந்தகுமாரின் இரண்டாவது வெற்றிப் படிக்கட்டு இது. படிப்போரையும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறவைக்கிறார். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்துத் தரப்பினரும், எல்லா தொழில் செய்பவர்களும், அவர்கள் சிறு வியாபாரிகளாக இருந்தாலும் சரி, பெரும் தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, ஆண்கள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பினரும் விரும்பும்வகையில் வெற்றிக்குரிய வழிகாட்டுதலைத் தந்துள்ளார். அதற்குப் பொருத்தமான உன்னதமிக்க சின்னஞ்சிறிய கதைகளைக் கூறிச் சொல்வது நூலின் சிறப்பு. தன்னம்பிக்கை, தொடர் முயற்சி இவைகளே நம் இலட்சியத்தை அடையும் வழிகள் என்ற நூலாசிரியரின் கருத்து, பலரை வெற்றி நோக்கி கொண்டு செலுத்தும். நன்றி: குமுதம், 23/3/2015.
—-
தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள், திருமயம் பெ.பாண்டியன், வைகை ஆறுமுகம், அட்டாமா வெளியீடு, காரைக்குடி, விலை 40ரூ.
தமிழ்நாட்டில் உள்ள ஜோக்ஸ் எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்புகள் படத்துடன் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/3/2015.