வேட்டைக்கத்தி
வேட்டைக்கத்தி, ஹாருகி முரகாமி, தமிழில்-ச.ஆறுமுகம், ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை, பக். 96, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-9.html
ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் வேட்டைக் கத்தி இருபதாவது பிறந்தநாளில் அவள், அமெரிக்க எழுத்தாளர் மெய்லி மெலாயின் பதிலித் திருமணம், இங்கிலாந்து அறிவியல் புனைகதை எழுத்தாளர் மோனிகா ஹ்யூக்ஸின் வணக்கம் நிலவே, போய் வருகிறேன் ஆகிய நான்கு கதைகளின் தொகுப்பு இந்நூல். முரகாமியின் கதைகளில் பாத்திரங்களைப் புதிரான மையமாக்கி நுட்பமான விஷயங்களை சட்டென்று உணர்த்தும்விதம் படிப்போரை பரவசப்படுத்தும் போர், பொருள்தேடல் என்று வரும்போது அது திருமண உறவுகளைக் கூட கேலிக்கூத்தாக்கிவிடும் என்பதுதான் பதிலித்திருமணம். நிலவில் வசிக்கும் ஒரு கூட்டம் பூமிக்கு வந்தால் ஏற்படும் அனுபவங்களைச் சொல்லும் புனைகதையாக வணக்கம் நிலவே, போய் வருகிறேன் அமைந்துள்ளது. ச. ஆறுமுகத்தின் மொழிபெயர்ப்பு மூலக்கதைகளைப் படித்த அனுபவத்தையே தந்திருப்பது சிறப்பு.
—-
மயிலிறகாய் வருடும் நிர்வாணம், நந்தமிழ் நங்கை, புதுப்புனல், பாத்திமாடவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 80, விலை 60ரூ.
கவிதைகளை வாழ்வியலோடு பயணிக்க வைத்து, நடப்புகளை, உள்ளத்து உணர்ச்சிகளை, பெண்ணின் ஏக்கங்களை, அது காமமாகட்டும் பாசமாகட்டும் அத்தனையையும் ஒரு பிம்பமாக எழுப்பி, அதை உடைத்து, உள்ளே எதுவுமே இல்லை பார் என்று காட்டிச் செல்லும் கவிமனம் நந்தமிழ் நங்கைக்கு வாய்க்கப்பெற்றுள்ளது. காமத்தை நடுநிசியைத் தாண்டி இரவெல்லாம் அலைய விட்டவர் அதை விடியும்போது ஒரு பஞ்சாரக் கூடைக்குள் அடைத்து வைக்க அவரால் முடிகிறது. பெண்மையின் உள்மனம் கவிதை எங்கும் விவேகம் பெறுகிறது. மயிலிறகாய் வருடும் கவிகள் இவை. -இரா, மணிகண்டன். நன்றி: குமுதம், 29/5/2013.