ஸ்ரீ கருட புராணம்

ஸ்ரீ கருட புராணம், ஆர். குருப்ரஸாத், அம்மன் சத்தியநாதன், ஏஏபி அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை5, பக்கங்கள் 176, விலை 90ரூ.

ஸ்ரீமன் நாராயணரிடம் ஸ்ரீ கருடன் கேட்ட கேள்விகளும் அதற்கு ஸ்ரீமன் நாராயணர் அளித்த பதில்களுமே கருட புராணமாக உருவாகிது. உயிர்கள் ஏன் பிறக்கின்றன? எத்தகைய புண்ணியம் செய்தால் ஜென்பம் நீங்கும்? துன்பங்களுக்கு என்ன காரணம்? மனிதனின் இறப்புக்குப் பின் நடப்பவை எவை? கோ தானம் செய்வதற்கான விதிமுறைகள் யாவை? குருவை ஏன் மதிக்க வேண்டும்? ஸ்ராத்தத்தின் வகைகள் யாவை? ஸ்ராத்தத்தில் செய்ய வேண்டிய கடமைகள் எவை? யாருக்கு யார் ஸ்ரார்த்தம் செய்வது? சென்ற ஜென்மத்தில் செய்த வினையால் இந்த ஜென்மத்தில் எதுவாக ஒருவர் பிறப்பார்? என்பன கேள்விகளுக்கு ஸ்ரீமன் நாராயணர் அருளிய பதில்கள் மிகச் சுவாரஸ்யமாக தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதி அத்தியாயத்தில் ஸ்ரீ கருட நித்ய பாராயண ஸ்லோகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

—-

தமிழ் வளர்த்த எழுத்துச் சிற்பிகள் (தொகுதி 2), விக்கிரமன், இலக்கியப்பீடம் பதிப்பகம், பக்கங்கள் 136, விலை 70ரூ.

தினமணி தமிழ்மணியில் எழுதப்பட்ட கட்டுரைகளி தொகுப்பு இந்நூல். கொத்தமங்கலம் சுப்பு, பி.எஸ்.ராமையா, சுரதா, தொ.மு.சி.ரகுநாதன், கவிஞர் சுந்தர், தமிழ் ஒளி, டி.எஸ்.சொக்கலிங்கம், ஜெகசிற்பியன், கா.மு.ஷெரிப், அரு.ராமநாதன் பதிப்பாளர் முல்லை முத்தையா, அழ. வள்ளியப்பா ஆகியவர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. எழுத்தாளர்களின் படைப்புகள், அவர்களின் சிறப்பியல்புகள், வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் மிகவும் சுவையாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

—-

இந்திய வரலாற்றில் வ.உ.சி, ப. முத்துக்குமாரசாமி, நோபல் பப்ளிகேஷன்ஸ், 10, பி, முனுசாமி தெரு, சாலிகிராமம், சென்னை 93. பக்கங்கள் 816, விலை 450ரூ.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளையைப் பற்றி நிறையத் தகவல்கள் அடங்கியுள்ளன. விரிவான தொகுப்பு, பல்வேறு நூலாசிரியர்கள் எழுதிய நூல்களிலிருந்தும், தனிக் கட்டுரைகளில் இருந்தும் தேர்வு செய்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வ.உ.சி.யைப் பற்றி வாழ்வியல் நிகழ்வுகள், நினைவுகளளின் பதிவுகள், படைப்புலகப் பதிவுகள், அரசியல் அறிஞர்கள் பார்வையில் தமிழறிஞர்களின் பார்வையில் எனப் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் சிறந்த முறையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. வ.உ.சி. எழுதிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. ரமணிய பாரதியார் தமிழில் எழுத்துகள் குறைவு என்றும் புதிய எழுத்து வடிவங்கள் தேவைப்படுகின்றன என்றும் எழுதிய கட்டுரையும், அதற்குப் பதில் சொல்லும்வகையில் வ.உ.சி. எபதிய நாகரிகமிக்க வெறுப்புணர்வு இல்லாத விமர்சனக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. வழக்கறிஞர் தொழிற்சங்கத் தலைவர், தமிழறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகம் உடைய வ.உ.சி. அறித்து கொள்வதற்கான சிறப்பான ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. அரிய முயற்சி. நன்றி: தினமணி, 05, மார்ச் 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *