கங்காபுரிக் காவலன்

கங்காபுரிக் காவலன், விக்கிரமன், ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, விலை இரண்டு பாகங்களும் சேர்த்து 500ரூ. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன், தந்தைக்கு நிகராக சரித்திரத்தில் இடம் பெற்றவர். ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார். ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். இதன் பின்னணியில் கங்காபுரிக்காவலன் வரலாற்று நாவலை இரண்டு பாகங்களில் எழுதியுள்ளார், கலைமாமணி விக்கிரமன். பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ச்சியாக நந்திபுரத்து நாயகியை எழுதி சாதனை படைத்த விக்கிரமன், கங்காபுரிக் காவலனை சிறப்பாக எழுதி […]

Read more

ஸ்ரீ கருட புராணம்

ஸ்ரீ கருட புராணம், ஆர். குருப்ரஸாத், அம்மன் சத்தியநாதன், ஏஏபி அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை5, பக்கங்கள் 176, விலை 90ரூ. ஸ்ரீமன் நாராயணரிடம் ஸ்ரீ கருடன் கேட்ட கேள்விகளும் அதற்கு ஸ்ரீமன் நாராயணர் அளித்த பதில்களுமே கருட புராணமாக உருவாகிது. உயிர்கள் ஏன் பிறக்கின்றன? எத்தகைய புண்ணியம் செய்தால் ஜென்பம் நீங்கும்? துன்பங்களுக்கு என்ன காரணம்? மனிதனின் இறப்புக்குப் பின் நடப்பவை எவை? கோ தானம் செய்வதற்கான விதிமுறைகள் யாவை? குருவை ஏன் மதிக்க வேண்டும்? ஸ்ராத்தத்தின் வகைகள் யாவை? ஸ்ராத்தத்தில் செய்ய […]

Read more