12 பாவ பலன்கள்
12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.
—-
சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ.
ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற முயற்சியில் உருவானதே இந்நூல். நன்றி: தினத்தந்தி, 11/3/2015.
—-
அறிவூட்டும் அகபர் பீர்பால் கதைகள், நண்டுமாமா, தென்றல் நிலையம், கடலூர் மாவட்டம், விலை 50ரூ.
அக்பரின் அமைச்சரவையில் அறிவில் சிறந்த அமைச்சராக இருந்தவர் பீர்பால். இவருடைய வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளில், 28 நிகழ்வுகள் தேர்வு செய்யப்பட்டு கதையாக எழுதி தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015