ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்

ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள், குரோவர் பர், தமிழில் செ.நடேசன், சி.கேன் புக்ஸ், விலை 500ரூ. கடந்த,1956ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி, சோவியத் யூனியன், கம்யூனிஸ்ட் கட்சியின் 20ம் கட்சிக் காங்கிரஸில் நிகிதா குருச்சேவ் ஸ்டாலின் பற்றிய ரகசிய உரையாற்றினர். அவை, அனைத்தும், பொய்கள் என, ஆதாரங்களோடு நிரூபிக்கும் புத்தகம். நன்றி: தினமலர், 7/1/2017.

Read more

மோகினி

மோகினி, வ. கீரா, யாவரும் பப்ளிஷர்ஸ், பக். 104, விலை 90ரூ. கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு இடம் பெயர்ந்து வரக்கூடிய மனிதர்களின் வாழ்வியல் சச்சரவு, ஒரு கிராமத்து காதல், காமம், வாழ்வியல், கலாசாரம் உள்ளிட்டவை இடம் பெறும் வகையில், ‘மோகினி’ என்ற பெயரில் சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ‘தமிழு’ என்ற சிறுகதையில் வரும், பாலியல் தொழில் செய்யக்கூடிய பெண், தன் மகளை அத்தொழிலில் வர விடாமல் பாதுகாக்கிறாள். ஆனால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களிடம் இருந்து, தன் மகளை காப்பாற்ற, அவள் […]

Read more

நீர்

நீர், விநாயகமுருகன், உயிர்மை, விலை 150ரூ. தமிழ் நிலத்தின் நினைவுகளில், கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015 டிசம்பர் 5ம் தேதி, சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மாறாத வடுவாக, அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக, அந்தத் தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட்டு அலறும் அபயக் குரல்களாலும், அதனூடே பெருகும் மகத்தான மானுட அன்பினாலும், இந்த நகரம் நிரம்பியிருந்தது. அந்த அழிவின் காலத்திற்கு சாட்சியம் சொல்கிறது இந்த நாவல். நன்றி: தினமலர், […]

Read more

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. தமிழ் சமூக அழகியல், கலை, சமூக உணர்வை கட்டமைக்க தேவையான ஊடகம் சினிமா. அதற்கான அத்தனை கதவுகளையும் திறப்பதாக உள்ளது, தென் கொரிய சினிமா இயக்குனர், கிம் கி-டுக்கின் சினிமாக்களை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த நூல். நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பக். 220, விலை 190ரூ. சங்க இலக்கியம் துவங்கி, 1980களின் படைப்புகள் வரை, உலக இலக்கிய பின்னணியுடன், தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும், கோவை ஞானியினி 18 கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

நயனுறு நடைச்சித்திரம்

நயனுறு நடைச்சித்திரம், புதுகை மு. தருமராசன், புதுகை தென்றல், பக். 120, விலை 90ரூ. இலக்கிய அமைப்புகளின் மூலம், இலக்கியங்களையும், வளர்த்து பெருமைப்படுத்தும், 22 இலக்கிய ஆளுமைகளை பற்றிய, அறிமுக கட்டுரைகளின் தொகுப்பு, நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்

அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும், கவி. வளநாடன், இருவாட்சி பதிப்பகம், பக். 110, விலை 90ரூ. ‘பேஸ்புக்’ என்ற சமூக வளைதளத்தில் தான் பதிவு செய்தவற்றை, புத்தகமாக வெளியிட்டுள்ளார். நீண்ட நெடிய கட்டுரைகள் இதில் இடம் பெறவில்லை. இந்த நூல் மூலம், முகம் தெரியாத, மண்ணின் மைந்தர்கள் நமக்கு அறிமுகம் ஆகின்றனர். பேச்சு மொழியில் இடம் பெற்றிருக்கும் துணுக்குகள் ரசிக்க வைக்கும். நன்றி: தினமலர், 8/1/2017.

Read more
1 7 8 9