பொன்மொழிகள்

பொன்மொழிகள், ஹேமா பாஸ்கர் ராஜ், பக்கம் 202. விலை 150 ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொன்மொழிகள் புத்தகம் இது உலகம் புகழ் பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகள் சிரமப்பட்டு தேடிக் கண்டெடுத்து அழகாக தொகுத்து வழங்கியுள்ளார் தொகுப்பாசிரியர் ஹேமா பாஸ்கர் ராஜ். மொத்தம் ஆயிரத்து 695 பொன்மொழிகள் இதில் அடங்கி உள்ளன. முத்து மாலை போல ஜொலிக்கிறது புத்தகம். 202 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை 150 ரூபாய். நன்றி: தினத்தந்தி. 23-5-2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

இமயத்தில் புலி

இமயத்தில் புலி, தமிழில் சக்திதாசன் சுப்பிரமணியன், வேலா வெளியீட்டகம், விலை 100 ரூ. 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி வரலாற்றில் இடம்பெறத்தக்க முக்கிய நிகழ்ச்சி நடந்தது. அது வரை எவரும் அடைந்திராத உலகத்திலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை 29 ஆயிரத்து 28 அடி டென்சிங் ஹில்லரி ஆகிய இருவரும் அடைந்தனர், டென்சிங் நேபாளத்தையும், ஹில்லரி நியூசிலாந்து நாட்டையும் சேர்ந்தவர்கள், டென்சிங் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை இப்போது எழுதியுள்ளார். அதை சக்திதாசன் சுப்பிரமணியன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தை படிக்கும்போது […]

Read more

வள்ளுவரும் வள்ளல் எம் ஜி ஆரும்

வள்ளுவரும் வள்ளல் எம் ஜி ஆரும், மேகலா சித்ரவேல், மணிவாசகர் பதிப்பகம், விலை 125 ரூ. உலக தத்துவங்களை ஈரடி குறளில் எடுத்துரைக்கும் திருக்குறள் எனும் உன்னத படைப்பை நமக்கு அளித்த திருவள்ளுவர், பொய்யில் புலவர், தெய்வப்புலவர், நாயனார், தேவர், செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யாமொழி புலவர் என பல்வேறு பெயர்களில் போற்றப்படுகிறார். அதே போன்று மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், வள்ளல், மனிதநேய பண்பாளர், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என பல பட்டப் பெயர்களைக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம், (பாகம் 7), பேராசிரியர் டாக்டர் எஸ் சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், பக்கம் 296, விலை 220ரூ. ஆயுர்வேத மருத்துவப் பட்டம் பெற்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இந்நூல் ஆசிரியர், தினமணி கதிரில் 2004 முதல் 2017 வரை வாசகர்கள் தங்கள் நோய்களுக்கான மருத்துவம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் இந்நூலின் ஆறு பாகங்கள் இதேபோல் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு வெளியாகிய நிலையில் நல்ல வரவேற்பு […]

Read more
1 7 8 9