356 தலைக்குமேல் கத்தி
356 தலைக்குமேல் கத்தி, தி.சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 116, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-8.html
பஞ்சாபில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் ஆஙட்சிகள் கலைக்கப்பட்டு 356வது பிரிவு தொடர்ந்து எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பது குறித்த தெளிவான விவரங்களை இந்தப் புத்தகம் தந்துள்ளது. காங்கிரஸ் மட்டுமே இந்த அரசமைப்புச் சட்டப்பிரிவை துஷ்பிரயோகம் செய்ததில் குற்றவாளியாக இருக்கவில்லை. காங்கிரஸுக்கு மாற்றாக உருவான ஜனதா கட்சிக்கும் இதில் பங்கு உண்டு. 1977இல் ஜனதா ஆட்சியில் ஒட்டுமொத்தமாக ஒன்பது மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி தனது முடிவை அல்லது செயல்பாட்டை எதிர்க்கும் முதல்வருக்கு எதிராக 356ஆவது பிரிவை பயன்படுத்தியது என்பதுதான் உண்மை. மத்திய ஆட்சியில் ஊழல் புகார் எழுந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வழியில்லை. ஆனால், மாநில ஆட்சிகள் ஊழல் புகாருக்காக கலைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் மாநிலங்கள் மட்டும்தான் கலைக்கப்பட்டு வந்துள்ளன. குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டு 60 ஆண்டுகளில் அரசயலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரவு பயன்படுத்தப்பட்ட விதத்தையும், துஷ்பிரயோகம் செய்த சம்பவங்களையும் நூலாசிரியர் மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளார். அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசியல் விழிப்புணர்வுள்ள அனைவரும், அரசியலின் பல்வேறு பரிமாணங்களை எளிதில் புரிந்து கொள்ள இந்நூல் உதவும். நன்றி: தினமணி, 29/7/2013.
—
க்ரைம்/காதல் கதைகள் (தொகுதி 1), புஷ்பா தங்கதுரை, ரம்யா பதிப்பகம், பக். 512, விலை 160ரூ
என்றாவது வருவாய், 45 கிலோ சொர்க்கம், காணாமல் போன விமானம் என்று மூன்று நாவல்களின் தொகுதி இந்த நூல். முதல் நாவல் தான் செய்யாத குற்றங்களுக்குத் தவறாகத் தேடப்படும் கதாநாயகனின் ஓட்டம், தாவல், காதல், இறுதியில் வெளிநாட்டுக்கு அபின் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்தல் என்று கன்கார்டு வேகத்தில் செல்கிறது. இரண்டாவது மெல்லியதாய் உளவியலைத் தொட்டுச் சின்ன சஸ்பென்ஸ் முடிவுடன் எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது பல்லாண்டுகளுக்கு முன் காணாமல் போன ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானத்தை அடிப்படையாய் வைத்து பின்னப்பட்ட திகில் கதை. மூன்று நாவல்களுமே சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர், 28/7/2013