பிரபஞ்சனின் மனிதர் தேவர் நரகர்

 மனிதர் தேவர் நரகர், பிரபஞ்சன், 256 பக்கங்கள், 180 ரூ, புதிய தலைமுறை, சென்னை – 32

நாற்பத்தைந்து தலைப்புகளில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் மனிதர் தேவர் நரகர். பிறந்த ஊர், பிறப்புக்கு காரணமான அப்பா என்று தொடங்கும் இந்த நூலின் உருவாக்கத்தில் ஒரு அமைப்பு முறை இருப்பதைக் காணமுடிகிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதனை நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்னும் கட்டுரைகள் விளக்குகிறது. ஆசிரியர்கள் பற்றிய பிம்பம், கதை எழுதக் காரணமான விஷயங்கள் என்று வாழ்க்கை தொடர்பான பல்வேறு செய்திகளோடு வளர்ந்து செல்கிறது புத்தகம். பிரபஞ்சனின் பேசுவது போன்ற எழுத்து நடை நம்மை இழுத்துச் செல்வதை புத்தகம் முழுமைக்கும் காணமுடிகிறது. –முகிலை ராசபாண்டியன் நன்றி: தினமலர், 17-2-2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *