கர்ம வீரர் காமராசரின் வரலாறு
கர்ம வீரர் காமராசரின் வரலாறு, முகிலை எம். மதுசூதனப் பெருமாள், மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-5.html
கவிதை வடிவில் காமராஜர் வரலாறு. கல்விக்கண் திறந்த காமராசரின் வாழ்க்கை வரலாற்றை எளிய, ஆனால் இனிய கவிதை நடையில் ஆசிரியர் ஆக்கித் தந்துள்ளார். படிப்போர் உள்ளத்தை தொட்டு உணர்வை தட்டி எழுப்பும் கருத்துக்கள் நூல் முழுவதும் நிறைந்துள்ளன. நூலின் இறுதியில் பிரிவுத்துயர் என்னும் பாடல் தலைப்பிட்டு பத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதயம் கனத்த வரிகளால் நிரப்பி இறுதி செய்யும் பாங்கு நன்றாக உள்ளது.
_____
தெனாலிராமன் தந்திரக்கதைகள், ஜானகிமணாளன், திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 75ரூ.
நிறைய படங்களோடு தெனாலிராமன் கதைகள் கொண்ட புத்தகம். சிறுவர் சிறுமியர்களை மிகவும் கவரும்.
_____
காற்றில் அலையும் சிறகு, சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-946-3.html
மனித உள்ளுணர்வை வருடி வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்களைப் பல்வேறு பரிமாணங்களில் ஊடுருவிக் காட்டுகின்ற 16 சிறுகதைகளை தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன். அனைத்து கதைகளும் வாசகர் மனதை ஈர்த்து படிக்கத் தூண்டும் படைப்புகள்.
_____
மதிநலம், கணேஷ்ராம், மெய்ப்பொருள் பிரசுரம், 5/2ஏ, மந்தைவெளி புதுத்தெரு, புதுப்பேட்டை, குடியாத்தம் 632602, விலை 100ரூ.
தமிழ் சொற்களின் தோற்றுவாய் மற்றம் தொழில்நுட்ப சொற்களுக்கான தமிழ்ப்பதங்கள் என 2 தலைப்புகளில் புத்தகம் அமைந்துள்ளது. ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு உருவானது என்பதும் அதன் பொருளும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல தகவல்கள் வியப்பூட்டுகின்றன.
_____
அடோபி பிரீமியர், ஜெ. வீரநாதன், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர் 641 045, விலை 190ரூ.
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருட்களில் முதன்மையானது அடோபி பிரீமியர் ஆகும். வீடியோ எடிட்டிங் என்பது மிகப்பெரிய விஷயம் என்ற எண்ணத்தை போக்கி, ஒரு கம்ப்யூட்டர் இருந்தாலே அனைவராலும் மிகவும் சுலபமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கும் வகையில் எளிய நடையில் ஆசிரியர் எழுதியுள்ளார். பயிற்சிக்கு உதவும் வகையில் சி.டி.யுடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 20 பிப்ரவரி 2013.