கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்
இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/
shop/100-00-0000-196-6.html
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் உச்சக் கட்டத்தை நெருங்கிய காலகட்டத்தில் அங்கு ஐ.நா.சபையின் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றியவர் கார்டன் வைஸ். அவர் இலங்கைப் போர் குறித்தும், விடுதலைப்புலிகளின் இறுதி நாட்கள் கறித்தும் இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ளார். அதை மூத்த பத்திரிகையாளர் கானகன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ரத்தம் தோய்ந்த மனித உரிமைகளை குழி தோண்டிப் புதைத்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் அவலத்தின் முக்கிய சான்றாக இந்த நூல் அமைந்துள்ளது. ஐ.நா. சபையின் அலுவலராக பணியாற்றியதால் பிறருக்கு கிடைக்காத அனுபவத்தை உண்மை நிகழ்ச்சியை உள்ளபடியே நடுநிலையோடு பதிவு செய்துள்ளார்.
—–
புத்திலக்கியங்களில் முற்போக்கு சிந்தனைகள், தமிழாய்வுத் துறை, தூய வள்ளார் கல்லூரி, திருச்சி 2, வசந்தா பதிப்பகம், 26, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 40ரூ
தற்கால எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் எழுத்துக்கள் எவ்வாறு உள்ளன? அவர்களுடைய சிந்தனையில் முற்போக்கு கருத்துக்கள் பூத்துக் குலுங்குகின்றனவா? இதை அறிந்து கொள்ள இந்த ஒரு புத்தகத்தைப் படித்தால் போதும். கவிப்பேரரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு. மேத்தா, கவிஞர் தாமரை, எழுத்தாளர் சு. சமுத்திரம் போன்றவர்களின் எழுத்துக்களை ஆராய்ந்த எடை போட்டிருக்கிறார்கள் தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழறிஞர்களும். எழுத்து சிற்பிகளின் படைப்புகளை, பாரபட்சமின்றி ஆராய்ந்து சிறப்புகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் பாராட்டத்தக்க முயற்சி.
—–
தமிழகத்து அருள் மிக்க ஆலயங்கள், அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 40ரூ.
தமிழகத்தில் ஆலயம் இல்லாத ஊரே கிடையாது என்று சொல்லலாம். இந்த ஆலயங்களை வெறும் தொழுகைக் கூடமாக அமைக்காமல் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை பரப்பும் விதமாக நமது முன்னோர்கள் அமைத்து உள்ளனர். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த நூலில் 203 கோவில்கள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் ஆசிரியர் அச்சு நாதர் சுருக்கமாக கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, சென்னை 13 மார்ச் 2012.