பேறு பெற்ற பெண்மணிகள்
பேறு பெற்ற பெண்மணிகள், அதிரை அஹ்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, பக். 160, விலை 65ரூ.
இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்ற கருத்தை மறுக்கிறது இந்த நூல். பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்தவில்லை என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு விடுதலையும் உரிமையும் வழங்குகின்றது (பக்.8). இஸ்லாத்தில் பலதார மணம் ஏன்? வரலாற்றில் போர்கள் முடிந்ததும் பல ஆண்கள் மடிந்துபோவர். அந்தப் பெண்களுக்கு வாழ்வு தரவே ஒரு ஆண் பல பெண்களை மணக்கிறார்கள் என்று இந்த நூல் பதில் தருகிறது. இஸ்லாம் என்பது ஒரு பயங்கரவாதச் சமூதாயம் அன்று. அமைதிக்காகவும், நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடும் புனித சமூகம் ஆகும் (பக். 47) என்கிறது இந்த நூல். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 9/10/2011.
—-
கமலாம்பாள் சரித்திரம், பி.ஆர். ராஜமய்யர், சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, ஒன்பதாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-191-2.html
தமிழில் முதல் நாவல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். இது 1876ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் ஐந்தாவது நாவல் என்று கருதப்படுவது பி.ஆர்.ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் (1896). இது விவேகசிந்தாமணி என்ற பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்து, பிறகு புத்தகமாக வெளிவந்தது. பாத்திரப்படைப்பு, நடை, சம்பவங்கள் எல்லாவற்றிலும் கலை நுட்பம் மிக்கது இந்த நாவல். யதார்த்த நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டது. எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதால், தமிழின் முதல் சிறந்த நாவல் என்று பல விமர்சகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, நவீன வடிவமைப்பால் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 8/2/2012.