பாம்பின் கண்
பாம்பின் கண், சு. தியோடர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்தளம், அம்பாள் பில்டிங், லாய்ட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html
ஆவணம் நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் முறையான வரலாற்றை ஆவணங்களோடு தெரிந்து கொள்வதற்கு நம்பகமான ஆய்வு நூல்கள் சிலவே உள்ளன. அந்த வகையில் 1997இல் தியோடர் பாஸ்கரன் எழுதிய த ஐ ஆப் செர்பண்ட் என்ற ஆங்கில நூல் முக்கியமானது. அதுதான் தற்போது பாம்பின் கண் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மௌனப்படங்களின் சகாப்தம் தொடங்கி தேசியம், திராவிடம் போன்ற சித்தாந்தங்கள்தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் வரை ஆழமாக இப்புத்தகம் பேசுகிறது. தமிழகத்தில் திராவிட இயக்கத்துக்கு முன்பே பொழுதுபோக்குக் கலைகளுக்கும் அரசியலுக்கும் இருந்த உறவை சத்தியமூர்த்தி அறுந்த இணைப்பு என்ற அத்தியாயம் அழகாக விளக்குகிறது. தமிழ் சினிமாவுக்குப் பங்காற்றிய பாடலாசிரியர்கள் பற்றிய குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய திருப்பங்களை உருவாக்கிய சினிமாக்கள் பற்றிய விரிவான விமர்சனங்களும் இந்நூலில் உள்ளன. தமிழ் சினிமைவை வெறுமனே பொழுதுபோக்காக அணுகாமல் சமூக, அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க முயலும் இந்நூல் முன்னோடி முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி: அந்திமழை, 1/1/2013.
—-
எண்களின் அன்பர்-ஸ்ரீநிவாச இராமானுஜன்,(வாழ்வும் கணிதமும்),இரா. சிவராமன், விலை 390ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-081-0.html
கணிதமேதை இராமானுஜன் பெருமைகள் இமயம் போன்றது. அவரது வாழ்க்கை காவியத்தை, இந்த நூல் அழகாக வெளிப்படுத்துகிறது. பை கணித மன்றத்தின் சிறப்பான படைப்பு இது. கணிதத்தை விரும்பும் மாணவ, மாணவியர் அனைவரும் போற்றி படித்து, பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இராமானுஜன் பற்றி அறிய, இந்த நூல் அவர்களுக்கு அரிய வாய்ப்பை தரும் என்பது உறுதி. நன்றி: தினமலர், 26/5/2013.

