356 தலைக்கு மேல் கத்தி
356 தலைக்கு மேல் கத்தி, தி. சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 70ரூ.
இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பிரிவு 356. இந்தப் பிரிவின் துணையுடன் பல மாநில அரசுகள், பல முறை கலைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கலைப்புகளுக்கான காரணத்தைத் தெளிவாக அலசுகிறது இந்த நூல். -முகிலை ராசபாண்டியன்.
—-
தீர்க்கதரிசி ராஜாஜி (நவ இந்தியாவின் சாணக்கியர்), சிவரஞ்சன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 35ரூ.
95 ஆண்டுகள் நீண்ட வாழ்க்கை வாழ்ந்த மூதறிஞர் 75 ஆண்டுகள் சுதந்திரப் போராட்டத்திற்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். அவரின் வாழ்க்கைச் சரிதத்தை, மிக எளிய நடையில் சுவையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். மாணவ மாணவியருக்கு பரிசளிக்க உகந்த நூல். -சிவா.
—-
நம் மண் போற்றும் மாதரசிகள், வெ. இன்சுவை, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 160, விலை 80ரூ.
இதிகாசம், புராணம், சரித்திரம் என்பனவற்றிலிருந்து, புகழ் பெற்ற பதினெட்டு மாதர் குலத் திலகங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் சரித்திரத்தை அழகுற எளிய நடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியை. இப்பெண்மணிகளின் வரலாறு, பெண்களிடையே ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் என்று நம்பலாம். நன்றி; தினமலர், 23/6/2013.