பால்பண்ணைத் தொழில்கள்
பால்பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓ.ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், எண்-100, லாடிஸ் பிரிட்ஜ் ரோடு, சென்னை 20, விலை 120ரூ.
கிராம மக்களின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தொழில்களில், பால் பண்ணைத் தொழில் முக்கியமானது. இத்தொழில் சிறக்க வங்கிக் கடன் உதவி, அரசு மானியங்கள், அவற்றை பெறும் வழிகள் ஆகியவற்றை ஆசிரியர் விளக்கி இருக்கிறார். பாலைக் கறக்க இயந்திரம் வசதியானது ஏன், பாலைப் பாதுகாக்க குளிரூட்டி அமைக்க ஆகும் செலவு, அதற்கான வழிமுறைகள் என்று, இத்தொழில் குறித்த பல்வேறு தகவல்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
—-
ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது, ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், விலை 50ரூ.
உயர் அதிகாரியாக பணியாற்றிய வரும், சமூக பிரச்னை அதிகம் கொண்டவருமான ஆசிரியர் எழுதிய கவிதைகள், தலைவர்கள் என்ற கவிதையில் ஓட்டை காசுக்கு விற்றவன் ஜெயித்ததும் கோடீஸ்வரன் ஆகிறான் என பதிவு செய்கிறார். விவசாயி என்ற தலைப்பில் உள்ள கவிதையில் கேரளவிடம் மல்லுக்கட்டுகிறோம். கர்நாடகாவிடம் பேரம் பேசுகிறோம் தண்ணீருக்காக. உச்ச நீதிமன்ற ஆணைகள்கூட துச்சமாகிப் போனது. இப்படி பல கவிதைகள் வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும். நன்றி: தினமலர், 7/7/13