தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம்
தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம், க.ப. அறவாணன், தமிழர் கோட்டம், பக். 304, விலை 200ரூ.
விஜய நகர அரசர் அரிகரபுக்கரின் மகனான, கம்பள நாயக்கர் மதுரையை அப்போது ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமியர்களை வீழ்த்தி விட்டு அரியணை ஏறினார். கி.பி. 15, 16ம் நூற்றாண்டில் மதுரையைப் பிடித்த நாயக்கர் தஞ்சாவூர், செஞ்சி, வேலூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தன் பேரரசை நிறுவினார். நாயக்கர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் மிகக் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அக்காலத்தில், சமஸ்கிருதமும், தெலுங்கும் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன. மொழி அளவில் மட்டுமின்றி, தமிழருடைய பண்பாட்டுப் பழக்க வழக்கங்களிலும், நாயக்கர் தம் பண்பாடு ஊடுருவியிருந்தது. இதன் விளைவாக அக்கால மக்கள் பற்றிய செய்திகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் கைத்தொழில்கள் பெண்கள் நிலை, சமயம், அரசாட்சி, கலை, மொழிக்கலை, விழாக்கள் என்று பல தலைப்புகளில் ஆசிரியர் சிறப்பாக விவரித்திருக்கிறார். நன்றி: தினமலர் 14/7/13.
—-
இப்பொழுது, எகார்ட் டோலே, தமிழில்-என். கனமணி, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 160ரூ.
60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் 20 லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்ததுடன், வாசகர்களின் பாராட்டை பெற்ற நூல் இப்பொழுது. ஜெர்மனியை சேர்ந்த எகார்ட்டோலே ஆங்கிலத்தில் எழுதிய நூலை தமிழில் என். கனகமணி மொழிபெயர்த்துள்ளார். அறிவு தெளிவு பெறுவதற்கான அவசியமும், அவசரத்தையும் ஆன்மீக ரீதியாக அருமையான கருத்துக்களை இந்த நூல் கூறுகிறது. துன்பத்தை அமைதியாக்குவதும், வாழ்க்கையில் ஏற்படும் வலிகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான எளிய வழிகள் அடங்கிய கருத்துக்கள், 10 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது. படிப்பவர்களின் வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டவையாக இந்நூல் அமைந்துள்ளது.
—-
திருவள்ளுவர் அருளிய திருக்குறள், தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 1, விலை 40ரூ.
1330 குறள்களுக்கும் எழுதப்பட்ட தெளிவுரை. நன்றி: தினத்தந்தி,17/7/13.