அமானுஷ்யம்… ஆனால் உண்மை
அமானுஷ்யம்… ஆனால் உண்மை, வேணு சீனிவாசன், குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், செக்கை 49, விலை 100ரூ.
ஆவிகளின் கதையை, ஆவி பறக்க தந்திருக்கும் நூல். மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாத சில விஷயங்கள் நமக்கு பிரமிப்போடு பயத்தையும் ஊட்டுகின்றன. பறக்கும் பேய் மனதன், ஆண்களை தூக்கில் போட்டு உயிரை பலி வாங்கும் அமானுஷ்ய உருவம், கண்ணாடியில் தோன்றி அதிசயிக்க வைக்கும் சிலுவைக்குறி இப்படி ஒவ்வொரு சிலிர்ப்புப் பின்னணியிலும் ஒரு திகில் சம்பவம் மயிர்க்கூச்செரியும் விதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தீராத வயிற்றுவலியால் துடித்த இளம் பெண்ணுக்கு தேவதூதனே தேடி வந்து குணப்படுத்திய படலமும், சடலங்களுக்கு உயிர் கொடுத்து அவர்களை மனிதர்களைப்போல வேலை வாங்கும் சம்பவமும் படபடப்பும் திகிலுமான இணைப்புக் கலவை.
—-
ஆழ்வார்கள் அருள்மொழி, சாமி. சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 60ரூ.
வைணவர்களால் போற்றப்படும் ஆழ்வார்கள் பாடிய தமிழின் இனிமையுடன் ஆழ்ந்த கருத்துக்களை உடைய கூடிய பாடல்களை, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் இந்நூல் விளக்குகிறது.
—-
அவ்வை அருளிய ஞானபோதம், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ.
திருக்குறள் போல இரண்டு அடிகளில் அவ்வையார் இயற்றிய ஞானபோதம் முக்திக்கு ஒரு திறவுகோல் என்று போற்றப்படுகிறது. அதன் கருத்துரை, அரும்பதவுரை, தெளிவுரை ஆகியவற்றை சிறப்பாக எழுதியுள்ளார் டாக்டர் முருகடிமை துரைராஜ். நன்றி: தினத்தந்தி, 29/5/13.