நேபாளில் புனிதப் பயணம்
நேபாளில் புனிதப் பயணம், இமாலயா பதிப்பகம், 285, 1/34பி, முதல் தளம், எமரால்டு வணிக வளாகம், திருச்சி முதன்மைச் சாலை, தஞ்சை 7, விலை 60ரூ.
இமயமலைச் சாரலில் உள்ள நேபாளத்தில் எவரஸ்ட் சிகரம் உள்பட பல சிகரங்களும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், உலகப் புகழ் பெற்ற கோவில்களும் உள்ளன. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மருத்துவர் நா. மோகன்தாஸ், தன் அனுபவங்களை விவரித்து இந்த நூலை எழுதியுள்ளார். படிப்பதற்கு சுவையான பயனுள்ள புத்தகம்.
—-
டாண்கியோட்டே, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10-2, (8-2)போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-142-2.html
உலகின் முதல் நாவல் உலகின் முதல் நாவல் என்ற பெருமைக்குரியது டாண் கியோட்டே என்ற ஸ்பெயின் நாட்டுக்கதை 400 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிஷ் மொழியில் இதை எழுதிய செர்லான்டெஸின் பிறந்த நாளான ஏப்ரல் 23ந் தேதி உலகம் முழுவதும் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இந்த நாளில்தான். கி.பி. 17ஆம் நூற்றாண்டின் வீர சாகசங்களைப் பற்றிய கதைகளில் கற்பனைகள், கனவுகள் மலிந்திருப்பது தெரிகிறது. ஸ்பெயின் எங்கும் பாதிரியார்கள், மடங்கள், சத்திரங்கள், காதல் நினைவுகளோடும், ஏக்கங்களோடும் காத்திருக்கும் கன்னியர். அவர்கள் எங்கே ஒளிந்திருந்தாலும் தேடிப்பிடித்து அவர்களை நாசப்படுத்தும் மனிதர்கள், மதம் கடந்தும் காதலித்து நிறைவேற முடியாமல் திணறிய காதலர்கள், காதலிக்காகவே போரிடும் வீரர்கள், அவர்களுக்காக எழுதப்படும் காதல் கடிதங்கள், ஒழுங்கற்ற மேடு பள்ளமான பாதைகள் என மண்ணையும் மனிதர்களையும் அழகுறச் சித்தரிக்கிறது இந்த நாவல். மேலும் இந்திய பண்பாட்டை நினைவுபடுத்தும் சொற்களும், மரபுகளும், பழமொழிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இயல்பான நடையில் பெரியோரும் சிறியோரும் விரும்பிப் படிக்குமாறு பக்கத்திற்கு பக்கம் நல்ல படங்களோடு வழங்கியிருக்கிறார் அமரர் ஆ. அலங்காமணி. நன்றி : தினத்தந்தி, 28/8/2013.