ஜெயகாந்தன் சிறுகதையில் பெண்
ஜெயகாந்தன் சிறுகதையில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், 1603, ஆரோக்கிய நகர் ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 613006, விலை 175ரூ.
ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகளில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். பெண்களும் – குடும்பம், ஆண்-பெண் உறவுநிலை, பெண் தொழிலாளர் நிலை, மரபு வழிப்பட்ட பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் உள்ளிட்டவை மூலம் சிறுகதைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நூல் மூலம் ஜெயகாந்தனின் பெரும்பாலான சிறுகதைகளின் சராம்சத்தை அறிந்து கொண்ட திருப்தி ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 11/9/2013.
—-
நீயே சொல் நண்பா, தென்றல் நிலையம், 12பி, மேலசன்னதி, சிதம்பரம் 608001, விலை 40ரூ.
மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமானால் பொது வாழ்வில் ஈடுபட்டால் தான் முடியும் என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால் வருவாய்த்துறை போன்ற துறைகளில் பணியாற்றுவோரும் தொண்டு செய்ய முடியும் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல் நீயே சொல் நண்பா. மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற குப்பு சு.மணி என்பவர் தன்னுடைய 30 ஆண்டுகால பணி அனுபவத்தை 30 கடிதங்களை நூலாக தொகுத்துள்ளார். அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள உதவும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 11/9/2013.
—-
டார்வின், ப. செங்குட்டுவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-0.html
மனிதனும், பிற உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவை என்ற கருத்துக்கு மாறாக, ஒரு செல் உயிரினத்தில் இருந்து பரிணமித்து வளர்ந்தவர்கள் அவர்கள் என்ற தனது பரிணாமவியல் கோட்பாட்டின் மூலம் உலகில் புயலையும், புரட்சியையும் ஏற்படுத்தியவர் சார்லஸ் டார்வின். இன்று அவரது கருத்துகளை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்கிறது. டார்வின் வாழ்க்கையை ஆழமாக அலசி இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/9/2013.